தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்.. விவசாயிகள் கோரிக்கை... மிகுந்த எதிர்பார்ப்பு 

தமிழ்நாடு சட்டசபையில் காலை 9.30 மணிக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

Mar 15, 2025 - 07:32
Mar 15, 2025 - 07:34
 0
தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்.. விவசாயிகள் கோரிக்கை... மிகுந்த எதிர்பார்ப்பு 

சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை இன்று (மார்ச்.15) தாக்கல் செய்யப்பட உள்ளது. வேளாண் பட்ஜெட்டை அந்தத் துறையின் அமைச்சர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்ற உள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று (மார்ச்.14 ) தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சுமார் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் பேசி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த நிலையில், 2025-2026ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு சட்டசபையில் காலை 9.30 மணிக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். சுமார் 1 மணி நேரம் அவர் உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது.

கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் வேளாண் துறைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அந்த வகையில், 5வது முறையாக வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.

வேளாண் பட்ஜெட்டுக்கு முன்னதாக விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்துள்ளனர். ஆகையால் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் பட்ஜெட்டில் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் இடையே எழுந்துள்ளது. மேலும் விவசாய கடன்கள் தள்ளுபடி உள்ளிட்டவை இடம் பெறுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும், பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் வேளாண்மைத் துறையின் செயலாளர் தட்சணாமூர்த்தி விளக்க உள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow