விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுகவினர் வல்லவர்கள் – வேளாண் பட்ஜெட் குறித்து இபிஎஸ் விமர்சனம்
இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுகவினர் வல்லவர்கள் என தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
பட்ஜெட் ஒரு போலி தோற்றம்
தமிழக சட்டப்பேரவையில் 2025-2026ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட்டை தொடர்ந்து அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏக்கள் என அனைவரும் பச்சை துண்டோடு சட்டப்பேரவைக்கு வந்தனர்.
இந்த நிலையில் தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த நான்கு ஆண்டுகளாக தாக்கல் செய்த வேளாண் நிதிநிலை அறிக்கை போல இந்த பட்ஜெட்டும் உள்ளது. எந்த வித மாற்றமும் இல்லை.
ஏமாற்றுவதில் திமுக அரசு வல்லவர்கள்
விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுக அரசு வல்லவர்கள் என்பதை இந்த பட்ஜெட் மூலமாக மீண்டும் நிரூபித்துள்ளார்கள். இந்த பட்ஜெட் மூலமாக விவசாயிகள் வளமாக வாழ்வார்கள் என்று நினைத்து வந்த நிலையில், இந்த பட்ஜெட் ஒரு போலி தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் வாசிக்கப்பட்ட இந்த வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எதுவுமே இல்லை. பல துறைகளை ஒன்றாக இணைத்து அவியல் கூட்டு போல பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் தாக்கல் செய்துள்ளார். 5வது முறையாக பட்ஜெட்டை வாசித்தது மட்டுமே சாதனை என விமர்சித்தார். மேலும், விவசாயிகளுக்கு முளைக்காத விதை, உபயோகம் அற்ற பயிர்கள், உரங்கள் போன்றவற்றையே தமிழக அரசு வழங்கி இருக்கிறது.
கடன் வாங்குவதில் முதன்மை மாநிலம்
இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கடன் வாங்கித்தான் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியும் என்கிற நிலையில் தான் தமிழக அரசு உள்ளது என கடுமையாக விமர்சித்தார்.
’
Read more :இயற்கை வேளாண்மைக்கு கோடிகளை ஒதுக்கிய அரசு... வேளாண் பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
What's Your Reaction?






