நான்கு ஆண்டுகளாக அதே வாசிப்பு.. வெற்று காகித பட்ஜெட் என விவசாய சங்க தலைவர் விமர்சனம்..!

நான்கு ஆண்டுகளாக வாசிக்கப்பட்ட அதே வாசிப்பு என்றும், வெற்று காகித பட்ஜெட் என தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் கடையநல்லூரில் தெரிவித்துள்ளார்.

Mar 15, 2025 - 21:42
Mar 16, 2025 - 11:09
 0
நான்கு ஆண்டுகளாக அதே வாசிப்பு.. வெற்று காகித பட்ஜெட் என விவசாய சங்க தலைவர் விமர்சனம்..!
விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன்

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவற்காக தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் கடையநல்லூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழகத்தில் திமுக பொறுப்பேற்று ஐந்து ஆண்டு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. அடுத்த ஆண்டு  சட்டமன்ற தேர்தல் வரக்கூடிய நிலையில் இன்றைய பட்ஜெட் விவசாயிகளால் மிகுந்த எதிர்பார்த்த பட்ஜெட் கடந்த நான்கு ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட பட்ஜெட் அதே வாசகங்களுடன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக பின்பற்றிய அதே மரபு அதே வாசகங்களையும் மறுவாசிப்பாக இன்றைய பட்ஜெட் வாசிக்கப்பட்டுள்ளது.

சதவீதம் விதை உற்பத்தி 18 சதவீதம் தான் என தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதை 40% ஆக மாற்ற வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தும் இதுகுறித்து எந்த அறிவிப்பும் இல்லை ஏழு இடங்களில் விதை உற்பத்தி சுத்திகரிப்பு  நிலையங்கள் துவக்கப்பட உள்ளதாகவும், அதற்கு 250 கோடி விதை உற்பத்திக்காக செலவிட உள்ளதாகவும்  அறிவித்துள்ளனர். 

சொட்டு நீர் பாசனத்திற்கு 1168 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதையும் வரவேற்கிறோம். அதனை பாராட்டுகிறோம். ஆனால், அறிவிப்புகள் குறித்து அறிவிப்புகள் வாசிக்கப்படுகிறது. தவிர அதற்கான தொகையை விடிவிக்காமல் கடந்த நான்கு ஆண்டுகளாக பயன்பெற முடியாத நிலையும் உள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசும் முதலமைச்சரும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். வேளாண் வாடகை இயந்திர மையங்கள் சுமார் ஐந்தாயிரம் தருவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறீர்கள். இந்த அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வரவேண்டும்.

அதேப் போல் சிடி சேனல்களை தூர்வார்கிறோம் என்று இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து இருபத்து ஐந்து (2925) கிலோ மீட்டர் நாங்கள் தூர் வாரப்போகிறோம் என்று சொல்கிறீர்கள். இந்த திட்டத்திற்கான அறிவிப்பும் ஒதுக்கப்படும் நீதியும் எந்த வகையிலும் பொருத்தம் இல்லாமல் உள்ளது. 

அதே போன்று விவசாயிகளுக்கான மானிய திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது தவிர அதனை ஆளுங்கட்சியினர்  சட்ட விரோதமாக பயன்படுத்துகிறார்கள். இதனால் அனைத்து பகுதி மக்களுக்கும் அந்த ஒதுக்கப்படும் நிவாரண திட்டம் சென்று அடைவதில்லை எனவும். தமிழ்நாடு அரசு தனி காப்பீட்டு திட்டத்தை உருவாக்க வேண்டும் பிரதமர் காப்பீட்டு திட்டத்தை குஜராத் மாநில அரசே நம்பவில்லை. இதற்கு அந்த மாநில அரசு தனி காப்பீடு திட்டத்தை உருவாக்கியுள்ளது.

இதேபோன்று தமிழக அரசும் திட்டத்தை கொண்டுவரும் என எதிர்பார்த்தோம் இது குறித்து எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை எனவும்.  காப்பீடு திட்டம் செலுத்துகிறோம் என்ற பெயரில் ஆண்டுக்கு ஐந்தாயிரம் கோடி நிதிகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்துக் கொள்ள வலிவகை வைக்கிறது. தவிர பாதிக்கப்படுகிற விவசாயிகளுக்கு இழப்பீடு பெற இயலவில்லை. 

குறிப்பாக நெல் விவசாய உற்பத்தி அதிகரித்து இருக்கிறது என்று கூறுகிறார்கள். நெல் உற்பத்தி இரண்டு லட்சம் ஏக்கர் அதிகரித்து இருக்கிறோம் என்று சொல்கிறார்கள் ஆனால் அதற்கான எந்த விதமான அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்தவில்லை மாறாக உற்பத்தி செய்யப்பட்ட நெல்லையே தனியாருக்கு தாரை வார்த்திருக்கிறார்கள் இதனை கைவிட வேண்டும் என நாங்கள் வரியுறுத்தினோம். ஆனால் அது குறித்தான எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.

மேலும் நெல் உற்பத்தி பெறுவதற்கு அடிப்படை காரணம் கொள்முதல் உத்தரவாதம் இருந்ததால் தான் உற்பத்தித்திறன் பெருகுகிறது ஆனால் நடப்பான்டில் கொள்முதல் தனியாருக்கு தாரை வார்த்ததால் இனி நெல் உற்பத்தி குறைவதற்கான பேராபத்தும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கரும்பு மட்டும் மற்ற பயிர்களுக்கான கொள்முதல் உத்திரவாதம் இல்லாமல் அழிந்ததோ அதே நிலை நெல்லுக்கும் ஏற்படும் பேராபத்து உள்ளது.     

கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையிலேயே திமுக கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நெல்லுக்கு குயின்டாலுக்கு 2500 ரூபாயும் கரும்புக்கு டன் ஒன்றுக்கு நான் ஆயிரம் ரூபாயும் நாங்கள் ஆட்சியில் பொறுப்பேற்ற உடனே வழங்குவோம் என்று ஆனால், நான்காண்டுகள் கடந்து விட்டது. இதுவரையில் அதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை மாறாக நாங்கள் சொல்வதை செய்கிறோம் என்று சொல்கிறார்கள் செய்கிற நடவடிக்கைகளுக்கும் அறிவிப்புகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. குறிப்பாக கல்வி கடன், வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும் அறிவித்தார்கள். ஆனால், தற்போது கல்வி கடன் பட்டியலின மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாணவர்களுக்கு இல்லை.  

17 -ஆயிரம் கோடி கூட்டுறவு வங்கி மூலம் கடன் கொடுக்கப் போகிறோம்.  என்று மிகப்பெரிய பொய்யை  அறிவித்திருக்கிறார்கள் இதில் விவசாயிகள் கடன் பெற முடியாத தகுதியை விவசாயிகள் இழந்திருக்கிறார்கள் மத்திய அரசின் கொள்கையால் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் நிலைகுலைந்து  போயிருக்கின்றன.

குறிப்பாக திமுக அரசு வேளாண் பட்ஜெட் என்று தன்னை வாழ்த்திக் கொள்கின்ற பாராட்டிக்கொள்கின்ற திமுக அரசாங்கம் விவசாயிகளை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வைத்து முகவரியையே  அழித்து விட்டார்கள். இதனை திரும்பப் பெறுவார்கள் என்று எதிர்பார்த்தோம். அந்த அறிவிப்பும் இல்லை  மாறாக விளம்பர பட்ஜெட்டாகவும் காகித பட்ஜெட்டாகவும் இருக்கிறதே தவிர  மாறாக வாசிக்கப்படுகிற நிதிகள் விடுவிக்கப்படாமல் கடந்த நான்கு ஆண்டுகளாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை எனவும் அதற்கு அடையாள பூர்வமாக ஒதுக்கப்பட்ட நிதியும் உரிய காலத்தில் விடுவிக்காமல் அது ஊழல் முறைகேடுகளுக்கு வழி வகிக்கிறதே தவிர விவசாய மேம்பாட்டுக்கு வளர்ச்சிக்கு திமுக அரசு பின்பற்றவில்லை எனக்கு கூறினார். 

தொடர்ந்து  வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் விலை நிலைகளையும்  விவசாயிகளையும் அளிப்பதற்காகவே அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பாக மலைகளில் உள்ள வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளையும் விளை நிலங்களை நோக்கியும் நகர்கிறது. அதற்கு அடிப்படைய காரணம் இயற்கை வளங்கள், கனிமவளங்கள் என ஒட்டுமொத்த மழை வளம்  அளிக்கப்படுவதால் வனவிலங்குகள் வாழ வழி இன்றி நிலப் பரப்புகளுக்கு வருகின்றது. அதனை தடுத்து நிறுத்துவதற்கு கொள்கைப்பூர்வமான  நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். விவசாயங்கள் அழிந்தாலும் அதற்கான இழப்பீடு வழங்க வேண்டும் குறிப்பாக கள்ளச்சாரம் குடித்து உயிரிழந்தால் 10 - லட்சம் நிதி தருகின்ற அரசு ஏன் விவசாயிகள் வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்தால் அவர்களுக்கு வழக்கூடிய உரிய நிதி வழங்காமல் வேடிக்கை பார்க்கிறது.

இதுவரையிலும் விலங்குகள் விவசாயிகளையும் விலை நிலைகளையும் அளிப்பதற்கு  அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்கோ  விலங்குகள் விலங்கின பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து விளக்க அளித்து விளை நிலங்களுக்கு வனவிலங்குகள் சென்றால் அதை சுட எந்த அனுமதியும் இதுவரை கொடுக்கப்படவில்லை. மேலும் அதற்கான தடுப்பு வேலிகள் அமைப்பதற்கான திட்டங்கள் எதுவும் இதில் இடம்பெறவில்லை ஒட்டுமொத்தமாக விவசாயிகளுக்கு ஏமற்றும் விதமான பட்ஜெட்டாகவும் உள்ளது.

மேலும் புளியங்குடியில் பகுதியில் அதிக சகுபாடு செய்யப்படும் எலுமிச்சைக்கு கடந்த தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன்  ,எலுமிச்சைக் புவிசார் குறி குறியீடு வழங்குவோம் என . இதுவும் இந்த அறிவிப்பில் இடம் பெறவில்லை. மேலும் செங்கோட்டை பகுதியில் அதிக அளவில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு இதே பகுதியில் மாம்பழ கூழ் தொழிற்சாலை மற்றும் குளிர்சாதன கிடங்கு அமைப்பது குறித்து எந்த அறிவிக்கையும் இல்லை. சங்கரன்கோவில் பகுதியில் அதிக அளவில் மலர் சாகுபடி உள்ளது. இதற்கும் எந்தவித அறிவிப்பும் இல்லை. ஆனால் திமுக அரசு கார்பிரேட்டுக்களுக்கு துணை போகுகின்றன அரசாக உள்ளது. இதனை எதிர்த்து தேர்தலில் விவசாயிகள் களம் காண இருக்கிறார்கள்..

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow