சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்புவார் - இஸ்ரோ தலைவர் நாராயணன்

விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்புவார் எனவும், இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து சந்திராயன்-5 வெண்கலம் அனுப்ப அனுமதி கிடைத்துள்ளதாகவும், ஆளில்லாத ரோபோட் வைத்து அனுப்ப திட்டமிட்டு உள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

Mar 15, 2025 - 21:34
Mar 16, 2025 - 11:28
 0
சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்புவார் - இஸ்ரோ தலைவர் நாராயணன்
சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்புவார் - இஸ்ரோ தலைவர் நாராயணன்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பிரபல மருத்துவர் ஜெயசேகரின் நூற்றாண்டு விழா நாகர்கோவில் அருகே அனந்தன் நகரில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட ஐ.எஸ்.ஆர்.ஓ தலைவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விண்வெளியில் உள்ள சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர ராக்கெட் அனுப்பப்பட்டுள்ளது. அவர் பத்திரமாக  பூமிக்கு திரும்புவார்.   
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இரண்டு செயற்கை கோள்களை டாக்கிங் என்ற முறையில் செயற்கைக்கோள்களை ஒன்றாக சேர்த்து வெற்றிகரமாக  தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. இது போன்ற வெற்றி பெற்ற நாடுகளில் இந்தியா 4-வது நாடாகும். 

9,800 கிலோ எடை கொண்ட சந்திராயன்- 4 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தி நிலவில் தரையிறங்க செய்து அங்குள்ள கனிமங்களை சேகரித்து  பூமிக்கு திரும்புவதற்கான தயார் நிலையில் உள்ளது. இந்தியா மற்றும்  ஜப்பான் நாடுகள் இணைந்து  சந்திராயன்-5 வெண்கலம் அனுப்ப அனுமதி கிடைத்துள்ளதாகவும், எதிர்காலத்தில் நிலவிற்கு  ஆளில்லா ரோபோடிக்  ராக்கெட் இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.  சிறிய ராக்கெட்டுகள் தயாரித்து அதன் மூலம் பல சாதனைகள் படைப்போம்.

முதல் விண்கலம் 1979-ல் இந்தியாவின் முதல் விண்கலம். அப்துல் கலாம் தலைமையில் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 100-வது விண்கலம் முறையாக விண்ணில் ராக்கெட்டு ஏவி சாதனை படைத்துள்ளோம். மகேந்திரகிரியில் அதிநவீன  ராக்கெட்டுகள் தயாரிப்பு தொடர்பான ஆய்வுகள் நடக்கிறது.

விண்ணில் உள்ள வெப்ப நிலைகள் மற்றும் அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான அதிநவீன தொழில்நுட்பத்தில் ‘நாசி ப்ரொடெக்டிவ் சிஸ்டம்’ சிறந்த முறையில் வெற்றி கண்டுள்ளது. ‌ விண்ணில் உள்ள சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர ராக்கெட் அனுப்பப்பட்டுள்ளது. வெற்றிகரமாக பூமிக்கு திரும்பி வருவார். செவ்வாய் கோளுக்கு மார்ஸ் ஆர்பிட் மிஷன் மூலம் அனுப்பப்பட்ட விண்கலம் 68 கோடி கிலோமீட்டர் தூரம் பயணித்து 294 நாட்கள் கழித்து அதில் உள்ள எந்திரங்களை செயல்பட செய்தோம். அது வெற்றிகரமாக செயல்பட தொடங்கியதை தொடர்ந்து உலகில் முதன்முதலில் பரிசோதனையில் வெற்றி கண்டது இந்தியா தான் என்ற பெருமை உள்ளது. 

வேறு எந்த நாட்டிற்கும் இந்த பெருமை கிடையாது. விண்வெளி சம்பந்தமாக அனைத்து நாடுகளும் மேற்கொள்ளும் திட்டங்களில் உள்ள வெற்றி தோல்விகளை அதற்கான காரணங்களை ஆராய்ந்து அதன் அடிப்படையில் நாம் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow