மாளியப்பட்டு தோசாலம்மன் திருவிழா.. மஞ்சு விரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
மாளியப்பட்டு தோசாலம்மன் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த ஓடிய காளைகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த மாளியப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு தோசாலம்மனுக்கு ஆலயத்தில் பகல் கூழ்வார்த்தல், கும்பம் படைத்து திருவிழாவானது நடைபெற்றது.
இதனையாடுத்து நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியில் உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த 140 காளைகள் பங்கேற்றன மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த ஓடின. இதில இலக்கை குறுகிய நேரத்தில் எட்டிய காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரம், 2வது பரிசு ரூ.1 லட்சம், 3வது பரிசு ரூ.75 ஆயிரம் உட்பட 50 பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக கே.வி.குப்பம் தாசில்தார் சந்தோஷ் முன்னிலையில் விழாக்குழுவினர் உறுதிமொழியேற்றனர். மேலும் குடியாத்தம் சப் கலெக்டர் சுபலட்சுமி, விழாவை மேற்பார்வையிட்டார்.
மஞ்சு விரட்டு விழாவை காண வந்திருந்த பார்வையாளர்களை மாடு முட்டியதில் 10 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் பலத்த காயமடைந்த 5 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த திருவிழாவிற்கான பாதுகாப்பு பணியில், லத்தேரி இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப் இன்ஸ்பெக்டர் நாராயணன் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் புஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடந்தது.விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர்பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.
What's Your Reaction?






