புதிய M4 Mac மினியில் ஸ்டோரேஜ் அதிகப்படுத்திக்கலாம்... ஆனால், அவ்வளோ சுலபம் கிடையாது.. ஏன் தெரியுமா?
ஆப்பிள் நிறுவனம் சில காலமாகவே தனது சாதனங்களுக்கு ஸ்டோரேஜ் மற்றும் ரேம் அப்கிரேட் செய்வதற்கான வாய்ப்புகளை குறைத்து வருகிறது. இருப்பினும், சமீபத்தில் வெளியான புதிய M4 Mac Mini சாதனத்தில், ஒரு தனி ஸ்டோரேஜ் சிப் மற்றும் நீக்கக்கூடிய எஸ்எஸ்டி கார்டு ஆப்ஷனும் இடம்பெற்றுள்ளன.
பின்புறத்தில் தண்டர்போல்ட், HDMI மற்றும் ஈத்தர்நெட் போர்ட்கள் மற்றும் ஒரு ஜோடி USB-C போர்ட்கள் மற்றும் முன்புறத்தில் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது அளவில் மிகவும் சிறியதாக இருக்கிறது.
இந்த நேரத்தில் மேக் மினியில் ஸ்டோரேஜை அதிகப்படுத்த நீங்க எஸ்எஸ்டி கார்டுகளை அகற்றவது என்பது சவாலான காரியம். ஏனென்றால், மற்ற சாதனங்களை போல் இல்லாமல், இந்த சாதனத்தில் ஸ்டோரேஜை அதிகப்படுத்த, ஒரு நுட்பமான அணுகுமுறை தேவைப்படுகிறது.
கொஞ்சம் பிசிரு தட்டினாலும், சாதனமே வீனாகிவிடும். சமீபத்தில் மேக் மினியில் உள்ள சிப்பை பிரித்துக் காட்டும் விதமான ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் இருந்தே இதில் எத்தனை சிக்கல் இருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
முதலில், ஸ்டோரேஜ் பிசிபியை இருக்கும் இடத்திற்கு செல்ல சாதனம் முழுவதையுமே பிரிக்க வேண்டும். தனித்தனியாக பிரித்தவுடன், ஸ்டோரேஜ் சிப்பை ஷூட் கன் பயன்படுத்தி கவனமாக அகற்ற வேண்டும். அதன் பிறகு, அனைத்து பழைய சாலிடரையும் ஒரு சாலிடரிங் அயர்ன் மற்றும் டீசோல்டரிங் விக் மூலம் அகற்ற வேண்டும். இப்போது அதிக ஸ்டோரேஜ் கொண்ட எஸ்எஸ்டிகளை ஆப்பிள் கான்ஃபிகரேட்டருடன் பொருத்திக் கொள்ளலாம். அவ்வளவு தான்.
என்னதான், எளிமையான பணியாக தெரிந்தாலும், அதை சரியாக செய்யவில்லை என்றால், மீண்டும் செலவு வைத்துவிடும். எனவே, ஸ்டோரேஜ் எக்ஸ்டென்ஷன் செய்வதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக் கொள்வது நல்லது.
What's Your Reaction?