ரோகித்தாக இருந்திருந்தால் நானும் இதையே தான் செய்திருப்பேன்.. இந்திய அணியின் கேப்டனுக்கு ட்ராவிஸ் ஹெட் ஆதரவு

நான் ரோகித்தாக இருந்திருந்தால் கண்டிப்பாக இதையே தான் செய்திருப்பேன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ட்ராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.

Nov 21, 2024 - 04:05
Nov 21, 2024 - 05:06
 0
ரோகித்தாக இருந்திருந்தால் நானும் இதையே தான் செய்திருப்பேன்..  இந்திய அணியின் கேப்டனுக்கு ட்ராவிஸ் ஹெட் ஆதரவு
ரோகித் சர்மா - ட்ராவிஸ் ஹெட்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் நவம்பர் 22 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. பெர்த் மைதானத்தில் தொடங்கும் இந்த டெஸ்ட் தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், பார்டர் கவாஸ்கர் போட்டியில் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொடரை கட்டாயம் வென்றால் மட்டுமே 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. மேலும்,  ஆஸ்திரேலிய தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றாக சூழலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதல் இரண்டு டெஸ்டில் போட்டியில் பங்கேற்காதது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வியை சந்தித்த சூழலில் ரோகித் சர்மா பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்து விலகுவது சரியில்லை என சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.  ஆனால், கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு குழந்தை பிறந்துள்ளதால் அவர் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளது சரியானது என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் ஆதரவு தெரிவித்திருந்தார். ஆரோன் பின்ச் ஆதரவு தெரிவித்த நிலையில், நான் ரோஹித் சர்மா இடத்தில் இருந்திருந்தால் தாமும் இதே முடிவை எடுத்திருப்பேன் என்று ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் கூறியுள்ளார். 

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “100% நான் ரோகித் சர்மாவின் முடிவுக்கு ஆதரவு கொடுக்கிறேன். அவருடைய சூழ்நிலையில் நான் இருந்தால் இதையே தான் செய்திருப்பேன். கிரிக்கெட்டில் விளையாடும் நாங்கள் நிறைய விஷயங்களை தியாகம் செய்கிறோம். நாங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த வாழ்க்கையை வாழ்கிறோம். எனவே நாங்களும் கவனிக்கப்படுகிறோம். ஆனால் முக்கிய போட்டிகளில் நாங்கள் விளையாடம் இருக்கும் போது சில சாதனைகளையும் தவற விடுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

பார்டர் கவாஸ்கர் தொடரில் முதல் போட்டியில் ரோகித் விளையாடவில்லையெனில் பும்ரா இந்தியாவை வழி நடத்துவார் என்று  கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow