இந்திய வீரர்களுக்கு கங்குலி ஆதரவு.. ஆனால் பாண்டிங் விரும்பவில்லை.. கைஃப் ஓபன் டாக்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இந்திய வீரர்கள் அதிகளவில் இடம்பெற சவுரவ் கங்குலி விரும்பியதாகவும், ஆனால், ரிக்கி பாண்டிங் அதனை விரும்பவில்லை என்றும் முஹமது கைஃப் தெரிவித்துள்ளார்.

Nov 20, 2024 - 00:25
Nov 20, 2024 - 00:29
 0
இந்திய வீரர்களுக்கு கங்குலி ஆதரவு.. ஆனால் பாண்டிங் விரும்பவில்லை.. கைஃப் ஓபன் டாக்
இந்திய வீரர்கள் அதிகளவில் இடம்பெற சவுரவ் கங்குலி விரும்பினார் - முஹமது கைஃப்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2018 – 2024 வரை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார். அந்த காலகட்டங்களில் ஒரு சீசனில் மட்டுமே டெல்லி ஃபைனலுக்கு சென்றது.

கடந்த 7 சீசன்களாக டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்தவர், ஆஸ்திரேலியா அணிக்காக 2 முறை உலகக்கோப்பையை வென்று கொடுத்திருந்தாலும், டெல்லி அணிக்காக ஒருமுறை கூட கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், இவரது தலைமையிலான டெல்லி அணி 2019ஆம் ஆண்டு தொடரில் டாப்-4 இடத்திற்குள் வந்தது. 2020ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்குள் நுழைந்த டெல்லி அணி, மும்பை அணியுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில், ரிக்கி பாண்டிங் டெல்லி கேபிடல்ஸ் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகி பஞ்சாப் கிங்ஸுக்கு தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார்.

இந்நிலையில், இது குறித்து கூறியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் முஹமது கைஃப், டெல்லி அணியில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின், அஜிங்கே ரஹானே போன்ற இந்திய வீரர்களை ரிக்கி பாண்டிங் கழற்றி விட்டதற்கு டெல்லி அணியின் இயக்குனராக இருந்த சௌரவ் கங்குலி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறியுள்ளார்.

இது குறித்து கூறியுள்ள முஹமது கைஃப், “டெல்லி அணியை இன்னும் சிறப்பாக வழி நடத்தியிருக்க முடியும் என்று ரிக்கி பாண்டிங் நிச்சயம் ஒப்புக் கொண்டிருப்பார். ஏனெனில் அவரும் கங்குலியும் நானும் நல்ல அணியை உருவாக்கினோம்.

பிறகு ரஹானே, அஸ்வின், இஷாந்த் சர்மா, ஹெட்மயர் ஆகியோருக்கு டெல்லி அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்திய வீரர்களுக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று சவுரவ் கங்குலி தெரிவித்தார். அதற்காக ஷிகர் தவானுடன் அவர் பேசினார். ஆனால் பாண்டிங் அதை ஏற்கவில்லை.

இந்திய டெஸ்ட் அணியில் தவான் நீக்கப்பட்டிருந்ததால் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக பாண்டிங் கருதினார். அதனால் தவானை பாண்டிங் விரும்பவில்லை. டேவிட் வார்னரை வாங்குவதற்கு தான் அவர் விரும்பினார். கடைசியில் தவான் எங்களுடைய முடிவை சரி என்பதை 500 ரன்கள் அடித்து நிரூபித்தார். அஸ்வினையும் அணிக்கு கொண்டு வந்த பெருமை கங்குலியையே சாரும்” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow