இந்திய சினிமாவில் முதன் முறையாக.. நடிகராக புதிய அவதாரம் எடுக்கும் டேவிட் வார்னர்..!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், இந்தியாவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள நிலையில், தெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமாகிறார்.

வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு எப்போதும் இந்திய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டுள்ளார்.
டேவிட் வார்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவராக இருந்தாலும், இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் இந்திய ரசிகர்கள் அவரை இந்தியராகவே பார்க்கத்தொடங்கினர். ஐபிஎல் போட்டிகளின் போது, மைதானத்தில் ரசிகர்களிடம் உரையாடுவது தொடங்கி, புஷ்பா படப்பாடலுக்கு ரீல்ஸ் பதிவிடுவது வரை ஒரு இந்தியரைப் போலவே வாழ்ந்து வருகிறார்.
புஷ்பா புகழ்
இந்தியர்களின் பண்டிகைகளான தீபாவளி, பொங்கள், விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது வரை இந்தியராகவே வாழ்ந்து வருகிறார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தின் பாடலுக்கு ரீல்ஸ் போட்டு, இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனார். நடிகர் அல்லு அர்ஜூன் தனது சமூக வலைதளப்பக்கத்தில், அல்லு அர்ஜூன் அந்த ரீல்ஸை பதிவிட்டு வார்னருக்கு வாழ்த்து தெரிவித்து நன்றி கூறினார்.
Read More: IPL 2025: சிஎஸ்கே ரசிகர்களுக்கு மெட்ரோவில் இலவச பயணம்..!
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த டேவிட் வார்னர் கடந்த 2024 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் தன்னுடைய கிரிக்கெட் வரலாற்றில், 49 சதங்களும், 98 அரை சதங்களும் அடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிக்காக விளையாடியுள்ளார். 2016 ஐபிஎல் தொடரில் இவரது தலைமையிலான ஹைதராபாத் அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
ஆனால், ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மெகா ஏலத்தின் போது டேவிட் வார்னரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. ஐபிஎல் போட்டிகளின் போது தனது குடும்பத்துடன் இந்தியாவில் வலம் வரும் டேவிட் வார்னர், இந்த முறை நடிகராக வலம் வருவார் என்ற செய்தி அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகராக அறிமுகம்
டேவிட் வார்னர், தெலுங்கு திரையுலகில் வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதின் நடிக்கும் 'ROBINHOOD' படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமாகிறார். புஷ்பா, மாகுபலி போன்ற தெலுங்கு பட காட்சிகளை வைத்து ரீல்ஸ் செய்து ரசிகர்களை கவர்ந்த வார்னர், தற்பாது ROBINHOOD படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடிப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
What's Your Reaction?






