'அவங்க யாருன்னே தெரியாது' நயன்-ஐ reject செய்த நெட்பிளிக்ஸ்..? உண்மையை உடைத்த இயக்குநர்..!

தற்போது ஆவணப்படம் தொடர்பான வழக்கில் நடிகை நயன்தாராவுக்கு பக்கபலமாக இருக்கும் நெட்பிளிக்ஸ், ஒரு காலத்தில் அவரை ஒரு புராஜெக்டுக்கு வேண்டாம் என ரிஜெக்ட் செய்ததாக வெளிப்படையாக பிரபல இயக்குநர் ஒருவர் பேசியுள்ளார்.

Mar 8, 2025 - 20:42
Mar 11, 2025 - 14:32
 0
'அவங்க யாருன்னே தெரியாது' நயன்-ஐ reject செய்த நெட்பிளிக்ஸ்..? உண்மையை உடைத்த இயக்குநர்..!
அவங்க யாருன்னே தெரியாது’ நயன்-ஐ reject செய்த நெட்பிளிக்ஸ்..? உண்மையை உடைத்த இயக்குநர்..!

நயன்தாரா அலையஸ் டயானா மரியம் குரியன் பெங்களூருவில் பிறந்தவர். சின்னத்திரை தொகுப்பாளியாக தனது முதல் அடியை எடுத்து வைத்த இவருக்கு வெள்ளி திரையில் மின்னண வாய்ப்பளித்தது மலையாள திரையுலகம். 2003ம் ஆண்டில் மனசினக்கரே என்ற மலையாள படத்தில் அறிமுகமானார் நயன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க, அடுத்த ஆண்டே வரிசையாக இரண்டு மலையாள படங்கள் புக் ஆனது.

இதனையடுத்து ஐயா திரைப்படம் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் எண்ட்ரீ கொடுத்தார். இனி என்ன... நயன்தாரா முன் சுக்கிரன் கை கட்டி நிற்க, சந்திரமுகி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதன்பிறகு ஹிட், ப்ளாப் என பல கலவையான படங்களை கொடுத்தாலும் நயன்தாராவை கொண்டாட மறக்கவில்லை தமிழ் திரையுலகம். 

நயன் வாழ்க்கையை மாற்றிய படம் என்றால் அது நானும் ரவுடி தான். இந்த படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனை காதலித்த நயன், ஜூன் 2022ம் ஆண்டில் ஊர்ரறிய அவரை மணந்தார். இவர்களுக்கு வாடகை தாய் மூலம் உயிர், உலக் என இரு மகன்களும் பிறந்தனர். surrogacyயால் பல சர்ச்சை நயனை சுற்ற, அவருக்கு உறுதுணையாக விக்கி இருக்க, பிரச்சனைகளை எல்லாம் புன்னகையோடு கடந்தார். இதன்பிறகு பாலிவுட்டிலும் வெற்றி பெற துடித்த அவர் 2023ம் ஆண்டில் ‘ஜவான்’ திரைப்படத்தில் ஷாருக்கானுடன் நடித்தார். இந்த படத்தின் மூலம் நயன்தாராவின் வளர்ச்சியை பார்த்த ரசிகர்கள் ’ஹையோடா’ என வாய்பிளந்தனர்.

இந்த நிலையில் தான்,  தனது 40வது பிறந்தநாளன்று அவரைப் பற்றிய nayanthara beyond the fairy tale என்ற டாக்குமெண்ட்ரி ஃபிலிம், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. அப்போது copyright பிரச்சனையில் தனுஷ், 10 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது, அதற்கு நயன் பதில் கொடுத்தது என இந்த விவகாரம் கோர்ட் வரை சென்றுள்ளது. இதில் நயந்தாராவிற்கு ஆதரவாக நீதிமன்றம் வரை துணை நிற்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனம், ஒரு காலத்தில் நயன்தாரா தெரிந்த முகம் இல்லை என அவரை ரிஜெக்ட் செய்ததாக இயக்குநர் அனுராக் கஷ்யப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதாவது நெட்ஃப்ளிக்ஸ் தயாரித்த சேக்ரட் கேம்ஸ் வெப் சீரிஸில் ரா ஏஜெண்ட் குசும் தேவி யாதவ் கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. ஆனால், அப்போது இந்தியாவில் நெட்பிளிக்ஸ் நிறுவப்படவில்லை. இதனால் அவர்கள் தென் இந்திய ரசிகர்களை பெரிதாக கருதவில்லை என கூறப்பட்டது. சர்வதேச ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக தேர்வு செய்து நடிக்க வைத்தார்கள் என அனுராக் கஷ்யப் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ஒரு காலத்தில் நயன்தாராவை ரிஜெக்ட் செய்த நிறுவனமே தற்போது அவருடைய ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது பெரிய சம்பவம் தான் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow