அரசியல்

போராடி தான் இன்று  இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளோம் - திருமாவளவன்

நாம் போராடி போராடி தான் இன்று  இந்த அங்கீகாரத்தை பெற்றிக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

போராடி தான் இன்று  இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளோம் - திருமாவளவன்
போராடி தான் இன்று  இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளோம் - திருமாவளவன்

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தகைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மார்ச் 8 உலக மகளிர் நாளை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன், கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில், சாவித்திரிபாய் ஃபூலே, ரமாபாய் அம்பேத்கர், அன்னை மீனாம்பாள் ஆகிய பெண் ஆளுமைகளின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் மகளிர் அனைவரையும் அமைப்பாய் திரட்டி அரசியல் படுத்தி பாலின சமத்துவத்தை வென்றெடுப்போம் என்று கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகளுடன் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்தாண்டு மார்ச் 8 மீண்டும் ஒரு மாநாடு நடத்த காலமும் இல்லை, நிதிஆதாரமும் இல்லை,  இந்தாண்டுக்கான உலக மகளிர் தினத்தை ஓட்டி திருவண்ணாமலையில் மார்ச் 29 ஆம் தேதி மகளிர் விடுதலை இயக்கம் விழா நடைபெற உள்ளது.

மகளிர் விடுதலை இயக்கம் சார்பாக மகளிர் தினத்தை ஓட்டி பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
தேர்தல் அங்கீரார நிகழச்சியில் அணிதிரளாக பங்கேற்க வேண்டும். மாநாடு இல்லை. ஆனால் அணியில் உள்ள பெண்கள் பங்கேற்க வேண்டும். தேர்தல் அங்கீராகத்தை எப்போதே பெற்று இருக்க வேண்டும். கால் நுாற்றாண்டு ஆகி தான் தமக்கு கிடைத்துள்ளது. அதற்கு நம் பட்டபாடு நமக்கு தான் தெரியும். 
விசிக ஒரு அரசியல் இயக்கமாக 25 ஆண்டுகள் ஆனாலும் அத்றகு முன்னதாகேவே பத்து ஆணனடுகள் மக்கள் இடத்தில் பணியாற்றிய இயக்கம் விசிக என்று தெரிவித்தார்.

1990-ல் தொடக்கதில் இநத்த இயக்கத்திற்கான கொடி வடிவமைப்பில் நடுவில் பாயும் சிறுத்தை படம் மேலே நீல வண்ணம் கீழே சிவப்பு நடுவில் நட்சத்திரம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.  ஏப்ரல் 16 ஆம் தேதி அம்பேத்கர்  பிறந்தநாளில் மதுரையில் கொடியை ஏற்றி வைத்தேன். இந்த இயக்க கொடி நாளை நமது தேசிய கொடி என கொடியை ஏற்றினோம். கொடியில் இருந்த நட்சத்திர கோட்பாடு, சாதி ஒழிப்பு, தமிழ் தேசியம்
மகளிர் விடுதலை, பாட்டாளி மக்கள் விடுதலை, ஏகாந்திய ஏதிர்ப்பு உள்ளிட்ட முழுக்கங்களை மையப்படுத்தி பாயும் சிறுத்தை நடுவில் இருந்தது. மகளிர் விடுதலை பெற வேண்டும் என்றால் எதில் இருந்து எவரிடம் இருத்து விடுதலை பெற வேண்டும் என்ற கேள்வி வரும் ஆண்களிடம் இருந்து தான் என பதில் வரும். ஆனால் ஒரு சில பெண்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

ஆண்களால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆணாதிக்கம் என்ற கருத்தியல் விடுதலை
சமூக அடையாளமாக,  உலக அடையாளமாக உள்ளது. இதனை புரிந்து கொள்ளும் போது தான் அதில் இருந்து வலிமைபெற முடியும் என தெரிவித்தார். மகளிர் விடுதலை என்பது பாலீனம் சமத்துவம் பார்வையை குறிக்கும், பெண்களுக்கும், ஆண்களுக்கும் உரிமை, அதிகாரம், வாய்ப்புகள் என இந்திய அரசியலமைப்பில் உள்ளது. 

ஒரு கட்சிக்கு வாக்கு வங்கி எவ்வளவு முக்கியமானது அதன் அடிப்படையில் தான் ஒரு கூட்டணி தீர்மானிக்கப்படும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் 40 ஆயிரம் வாக்குகள் பெற்றாலே அது பெரிய கட்சி என போற்றுகிறார்கள் 50 ஆயிரம் வாக்குகள் பெற்றாலே பெரிய அளவுக்கு சக்தி இருப்பதாக சொல்லுகிறார்கள்.
இது நான் இருந்த இடத்தில் யாராவது ஒரு நடிகர் இந்த 2 லட்சம் வாக்குகள் பெற்றிருந்தால் இவர்தான் அடுத்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் என  ஊடகங்கள் எழுதியிருப்பார்கள் 

நம்மை அப்போது யாரும் கண்டு கொள்ளவே இல்லை அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை அதை ஒரு விவாதமாகவில்லை அதை ஆய்வுக்கு உட்படுத்தவில்லை அதை கட்டுரையாக எழுதவில்லை அதற்கு ஒரு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை 15 நாட்களில் எப்படி திருமாவளவனுக்கு ரெண்டே கால் லட்சம் வாக்குகள் கிடைத்தன இந்த அளவுக்கு வாக்குகள் எப்படி உருவாகியது? அவர் மீது நம்பிக்கை வைத்து குவிந்தன இவர் மீது உள்ள எதிர்பார்ப்பு என்ன இவரின் எதிர்கால அரசியல் எப்படி இருக்கும் என்றெல்லாம் யாரும் பேசவில்லை எங்கோ எட்டாவது பக்கத்திலே 16வது பக்கத்திலே செய்தியாக போட்டார்கள் வன்முறை நடந்தது என்று முதல் பக்கத்தில் போட்டு விடுதலை சிறுத்தைகள் வன்முறையாளர்கள் என்ற ஒரு தோற்றத்தை உருவாக்கினார்களே தவிர நமக்கு பாசிட்டிவ் ஆக எந்த ஒரு செய்தியும் அன்றைய ஊடகங்கள் போடவில்லை நம்மை இருட்டடிப்பு செய்தார்கள்.

இன்றைக்கு கட்சி ஆரம்பித்தாலே ஆஹா ஓஹோ என்று யூகங்களை எல்லாம் பெரிய பெரிய செய்திகளாக மாற்றுகிறார்கள் இப்போது 20, 24 சதவீதம் என்றெல்லாம் சொல்கிறார்கள். அடுத்த முதலமைச்சர் இவர் தான் என்று ஊடகங்களே வரிந்து கட்டிக்கொண்டு வலிந்து வலிந்து செய்தியை ஊதி பூதாகாரம் படுத்துகிறார்கள். இன்னும் ஒரு தேர்தலில் கூட நிற்கவில்லை வாக்குகள் எவ்வளவு என்று யாருக்கும் தெரியாது ஆனாலும் இந்த சமூகமும் ஊடகமும் இத்தகைய அணுகுமுறையை கொண்டிருக்கிறது என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் எப்படிப்பட்ட சமூகத்தில் தான் போராடி போராடி இன்றைக்கு இந்த அங்கீகாரத்தை பெற்று இருக்கிறோம்