அரசியல்

பாஜகவுடன் கூட்டணியா?- விஜய்க்கு அமைச்சர் முத்துசாமி பதில்

திமுகவிற்கு பாஜகவுடன் ரகசிய கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை

பாஜகவுடன் கூட்டணியா?- விஜய்க்கு அமைச்சர் முத்துசாமி பதில்
தவெக தலைவர் விஜய் மற்றும் அமைச்சர் முத்துசாமி

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.இதில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அதிமுக நன்றாக இருக்க வேண்டும்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, திமுகவை நினைக்காமல் யாரும் இருக்க முடியாது என்பதற்கு தவெக தலைவர் விஜய் பேசியதே உதாரணம். திமுக தான் மெயின் என எல்லோரும் கருதுவதாக தெரிவித்தார். மேலும் திமுக ஒரு கொள்கையை வகுத்து அதில் அடிபிறழாமல்  செல்வதாகவும், ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் கொள்கையில் இருந்து விலகாது என்றார். 

Read more: ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு- அன்புமணி ராமதாஸ்

மும்மொழிக்கொள்கை, இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பிற்கு போராடுவது என்பது அரசியல் அல்ல. நாட்டைக் காப்பதற்கான கடமையில் முதல்வர் செய்து வருவதாக தெரிவித்த அமைச்சர் சு.முத்துசாமி, டெல்லிக்கு மாறி, மாறி அதிமுகவினர் சென்று வந்தாலும், அதிமுக நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் முதல்வர் நினைப்பதாக தெரிவித்தார்.

பாஜகவுடன் ரகசிய கூட்டணியா?

திமுகவிற்கு பாஜவுக்கும் ரகசிய கூட்டணியில் இருப்பதால் தான் டாஸ்மாக் ஊழல் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தவெக தலைவர் விஜய் கூறிய குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, திமுகவிற்கு பாஜகவுடன் ரகசிய கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணி வைக்க வேண்டும் என்றால் நேராக வைத்து கொள்ளோம் என்று தெரிவித்தார். கலைஞர் பாஜகவுடன் கூட்டணி வைத்த போதும், கூட்டணியிலிருந்து விலகிய போதும் வெளிப்படையாக அறிவித்ததாகவும், திமுகவை பொருத்தவரை ரகசியமாக அண்டர்கிரவுண்டில் சென்று வேலை செய்தது கிடையாது என்றும் கூறினார். இன்றைக்கு திமுக கூட்டணி வலுவாக உள்ளதை திமிராக சொல்லவில்லை என்று தெரிவித்தார்.