தமிழ்நாடு

மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை.. பின்னணி என்ன?

தனியார் பள்ளி ஆசிரியை 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை.. பின்னணி என்ன?
ஆசிரியை தற்கொலை

சென்னை ஓட்டேரி ஸ்டாரான்ஸ் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தேவிகா. இவர் புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் தினேஷ்  தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சொந்தமாக பாத்திரக்கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கணவன் -மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தேவிகா கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று இரவு வழக்கம் போல் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த தேவிகா 9-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

இதில் தேவிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு வாசிகள் உடனே இச்சம்பவம் குறித்து ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆசிரியை தேவிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தேவிகாவின் கணவர் தினேஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more:

ஜிப்லி டிரெண்டில் இணைந்த எடப்பாடி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்