தமிழ்நாடு

ஜிப்லி டிரெண்டில் இணைந்த எடப்பாடி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது மனத்திற்கு நெருக்கமான சில புகைப்படங்களை ஜிப்லி புகைப்படங்களாக மாற்றி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜிப்லி டிரெண்டில் இணைந்த எடப்பாடி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
டிரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி

அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஓபன் ஏ.ஐ. நிறுவனத்திற்கு சொந்தமான சாட் ஜிபிடி (Chat Gpt)  உலக அளவில் டிஜிட்டல் துறையில் நாளுக்கு நாள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதில், தற்போது ஏஜ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படங்களை ஜிப்லி ஓவியமாக மாற்றும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஜிப்லி புகைப்படம்

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமான ஜிபிடி 4.0 அம்சம் மூலம் புகைப்படங்களில் உள்ள நபர் மற்றும் பின்னணியில் உள்ள இடங்களை ஜிப்லி (Ghibli)  ஓவியமாக மாற்றும் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஜிப்லி சேவையானது எலான் மஸ்கின் ‘குரோக்’ ஏஐ மூலமாகவும் வழங்கப்பட்டு வருகிறது என்றாலும் பயனர்கள் பெரும்பாலும் ஜிப்லி புகைப்படங்களை பெறுவதற்கு சாட் ஜிபிடியை பயன்படுத்துகின்றனர்.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் இந்த ஜிப்லி புகைப்படமானது மிகவும் ட்ரெண்டில் இருக்கிறது. நெட்டிசன்கள் ட்ரெண்டில் இணைவதற்கு ஆர்வம் காட்டும் விதமாக சாட் ஜிபிடி ஏஐ ஆப்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

‘அவன கொஞ்சம் நிறுத்த சொல்லுங்களேன்டா’ என்ற அளவிற்கு சாட் ஜிபிடியைவே நெட்டிசன்கள் திணறடித்தனர்.  முதலில் கட்டணம் செலுத்துபவர்களுக்கு இச்சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில் பின்னர் குறிப்பிட்ட ஜிப்லி சேவையானது இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

டிரெண்டில் இணைந்த எடப்பாடி

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தற்போது ஜிப்லி டிரெண்டிங்கில் இணைந்துள்ளார். அதாவது, தனது மனத்திற்கு நெருக்கமான சில புகைப்படங்களை ஜிப்லி புகைப்படங்களாக மாற்றி அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.