இந்த வாரத் தொடக்கத்திலிருந்தே தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சங்களைத் தொட்டு சாமானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வந்தது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் சவரனுக்கு சுமார் 9,000 ரூபாய்க்கு மேல் உயர்ந்தது நகைச்சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை கணிசமாகக் குறைந்து வாடிக்கையாளர்களுக்குச் சற்று நிம்மதியை அளித்துள்ளது.
தங்கம் விலை வீழ்ச்சி
நேற்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் 1,34,400 ரூபாய் என்ற இமாலய விலையைத் தொட்டு மிரட்டியது. ஆனால், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே தங்கம் விலை குறையத் தொடங்கியது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 4,800 அதிரடியாகக் குறைந்துள்ளது.
இதனால் நேற்று 16,800 ரூபாய்க்கு விற்ற ஒரு கிராம் தங்கம், இன்று 600 ரூபாய் குறைந்து 16,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,29,600 ரூபாய்க்கு வந்துள்ளது.
வெள்ளி விலையும் சரிவு
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று இறங்குமுகமாக உள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 425 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 4,25,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு புதிய உச்சத்தை தொட்டது. ஆனால் இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 415 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 4,15,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. ஒரே நாளில் கிலோவிற்கு 10,000 ரூபாய் குறைந்துள்ளது வெள்ளி முதலீட்டாளர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.

LIVE 24 X 7