புஷ்பா 2 இசைவெளியீட்டு விழா: ரசிகர்கள் மீது போலீசார் தடியடி..!
புஷ்பா-2 திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ரசிகர்கள் கூட்டத்தினை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிஹார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. இந்த விழாவில், அரசியல் கூட்டத்தை மிஞ்சும் அளவிற்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான் புஷ்பா -1 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதில் அல்லு அர்ஜூன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்திருந்தனர். புஷ்பா படத்தில் நடித்தற்காக நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து இப்படத்தின் 2வது பாகம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் மாலை 5 மணிக்கு துவங்கிய இந்நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட 'புஷ்பா 2' படக்குழுவினர் பலர் கலந்து கொண்டுள்ளனர். இசை வெளியீட்டு விழா, அரசியல் பொது கூட்ட நிகழ்ச்சி போன்று காட்சியளித்ததாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டம் அரங்கத்தை தாண்டியும் நிரம்பி வழிந்துள்ளது. இசை வெளியீட்டு விழா தொடர்பான போட்டோ, வீடியோஸ் இணையத்தில் உலா வருகிறது.
இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ரசிகர்கள் ஒரு கட்டத்தில், அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரை நெருங்க முயற்சித்தனர். இதனால் பாதுகாப்பு கருதி ரசிகர்கள் நட்சத்திரங்களை நெருங்குவதற்காக தடுப்புகள் மற்றும் கட்டமைப்புகளில் ஏறியதால் விஷயங்கள் கட்டுப்பாட்டை மீறுவதாகத் தோன்றியது. போலீசார் கூட்டத்தின் மீது லேசான தடியடி நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
புஷ்பா திரைப்படம் திரையரங்கிலும், ஓடிடியிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, புஷ்பா 2 திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இப்படத்திற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது வரும் டிசம்பர் 5 ஆம் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?