Porn Star Riya Barde : இந்தியாவில் கைதான வங்கதேச ஆபாச பட நடிகை... யார் இந்த ரியா பார்டே..?

Porn Star Riya Barde Arrested in India : வங்கதேச ஆபாச பட நடிகை ரியா பார்டே இந்தியாவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sep 27, 2024 - 18:10
Sep 27, 2024 - 18:33
 0
Porn Star Riya Barde : இந்தியாவில் கைதான வங்கதேச ஆபாச பட நடிகை... யார் இந்த ரியா பார்டே..?
ஆபாச பட நடிகை ரியா பார்டே கைது

Porn Star Riya Barde Arrested in India : பார்ன் மூவிஸ் எனப்படும் ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர் அரோஹி பர்டே என்ற ரியா பார்டே. வங்கதேசத்தைச் சேர்ந்த இவருக்கு உலகளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், ரியா பார்டே சட்டத்திற்கு புரம்பாக இந்தியாவில் தங்கியிருந்ததாக மகாராஷ்டிரா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான ஆவணங்கள் மூலம் இந்தியாவில் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரியா பார்டேவின் அம்மா வங்கதேசத்தைச் சேர்ந்தவர் தான், ஆனால் அவரது தந்தை அரவிந்த் பார்டே இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபாச படங்களில் நடித்ததால் ரியா பார்டே(Riya Barde Arrest) மீது வங்கதேசத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதனால் போலி ஆவணங்களை ரெடி செய்த ரியா பார்டே, அதன் மூலம் தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் தங்கியிருந்தார். ஏற்கனவே இந்த வழக்கில் அவரது தாய், சகோதரி, சகோதரர், தந்தையை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தற்போது கைதான ரியா பார்டே மீது ஐபிசி 420, 465, 468, 479, 34, 14ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ரியா பார்டே(Riya Barde) இந்தியாவில் தங்கியிருந்ததை, அவரது நண்பரான பிரசாந்த் மிஸ்ரா என்பவர் தான் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பின்னரே ரிய கைது செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ரியா பார்டேவின் அம்மா வங்கதேசத்தைச் சேர்ந்தவர், ஆனால் அவர் மகாராஷ்டிராவின் அமராவதியைச் சேர்ந்த அரவிந்த் பர்டேவை திருமணம் செய்து கொண்டார். இதனால் ரியா பார்டேவும் போலி ஆவணம் மூலம் இந்தியாவில் தங்கிவிட முடிவு செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், கடந்த சில தினங்களாக ரியாவை தீவிரமாக தேடி வந்தனர். 

ரியா பார்டேவின் பெற்றோர் தற்போது கத்தாரில் உள்ளனர். இந்நிலையில், அவரை மகாராஷ்டிரா போலீஸார் கைது செய்து அதிரடி காட்டியுள்ளனர். இதனிடையே ரியா பர்டே ஏற்கனவே விபச்சார வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். வங்கதேசத்தைச் சேர்ந்த ஆபாச பட நடிகை ரியா பார்டே(Riya Barde Arrest), போலி ஆவணங்களுடன் இந்தியாவில் தங்கியிருந்ததால் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow