Cool Suresh: மஞ்சள் வீரன் ஹீரோ... TTF வாசனை தூக்கி அடித்த கூல் சுரேஷ்... அலப்பறையாக வந்த அப்டேட்!
சோஷியல் மீடியா பிரபலமாக வலம் வந்த கூல் சுரேஷ், இப்போது ஹீரோவாக நடிக்கவுள்ளதாக அப்டேட் வெளியாகியுள்ளது.

சென்னை: சிம்புவின் படங்களில் அவரது நண்பராக நடித்து பிரபலமானவர் கூல் சுரேஷ். ஒருசில படங்களில் நடித்துள்ள கூல் சுரேஷுக்கு, அதன்பின்னர் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழில் எந்தப் படங்கள் ரிலீஸானாலும், அதன் முதல் காட்சியை பார்க்க கண்டிப்பாக ஆஜராகிவிடுவார் கூல் சுரேஷ். அந்தந்த படங்களுக்கு ஏற்றபடி விதவிதமான கெட்டப் மட்டுமின்றி, குதிரையில் திரையரங்குகளுக்குச் சென்றும் மெர்சல் காட்டினார்.
அதேபோல், கடந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் கூல் சுரேஷ் செய்த சம்பவங்கள் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே ட்ரெண்டாகின. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், கூல் சுரேஷ் இன்னும் பிரபலமாகிவிட்டார். இந்நிலையில் தற்போது மஞ்சள் வீரன் படத்தின் ஹீரோவாக கூல் சுரேஷ் கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. செல்லம் என்பவர் இயக்கும் இந்தப் படத்தின் ஹீரோவாக முதலில் டிடிஎஃப் வாசன் கமிட்டாகியிருந்தார். யூடியூபரான டிடிஎஃப் வாசன், பைக் சாகசங்கள் செய்து 2கே கிட்ஸ்கள் மத்தியில் பிரபலமாகியிருந்தார். அதுமட்டும் இல்லாமல் டிடிஎஃப் வாசன் சர்ச்சைகளுக்கும் ரொம்பவே பெயர் போனவர்.
காஞ்சிபுரம் அருகில் விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன், அதிவேகமாக பைக் ஒட்டி போக்குவரத்து விதிகளை மீறியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அதுமட்டுமில்லாமல் அவரது ஓட்டுநர் உரிமத்தை 10 வருடங்களுக்கு ரத்து செய்து உத்தரவிட்டது நீதிமன்றம். இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வரும் முன், திருப்பதி கோயிலில் பக்தர்களை பிராங்க் செய்து மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் டிடிஎஃப் வாசன். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், டி.டி.எஃப் வாசன் மீது ஆந்திர போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் செல்லம் இயக்கும் மஞ்சள் வீரன் படத்தில் நடித்து வந்தார் டிடிஎஃப் வாசன். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகியிருந்த நிலையில், மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டி.டி.எஃப் வாசன் நீக்கப்பட்டதாக இயக்குநர் செல்லம் கூறியிருந்தார். இதனால் மஞ்சள் வீரன் படத்தின் புதிய ஹீரோ யார் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்நிலையில், மஞ்சள் வீரன் படத்தின் புதிய ஹீரோவாக கூல் சுரேஷ் கமிட்டாகியுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் இயக்குநர் செல்லம் உடன் கூல் சுரேஷும் படக்குழுவினரும் உள்ளனர்.
வழக்கம் போல இந்த வீடியோவில் கூல் சுரேஷ் அலப்பறைய கிளப்ப, மஞ்சள் வீரன் எப்படி வரப் போகிறதோ என ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இயக்குநர் செல்லம் மீது, மலர் தூவும் கூல் சுரேஷ், “மாமன்னனே வா... மாமல்லபுர சிற்பமே வா... மங்கையர்களின் இளவரசனே வா...” என்று துதி பாடும் வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை மக்களை கனமழை மிரட்டி வரும் நிலையில், மஞ்சள் வீரன் படத்தில் கூல் சுரேஷ் ஹீரோவாக நடிக்கவிருப்பது, கோலிவுட்டில் வைரல் கன்டென்ட்டாக மாறியுள்ளது.
''வெந்து தணிந்தது காடு !.....'' கதாநாயகனாக விஸ்வரூபம் எடுக்கும் கூல் சுரேஷ் !#CoolSuresh | #TTFVasan | #TTF | #ManjalVeeran | #DirectorChellam | #VendhuThanindhathuKaadu | #Youtuber | #TamilMovie | #DebutMovie | #KumudamNews pic.twitter.com/zolZvukdE8 — KumudamNews (@kumudamNews24x7) October 14, 2024
What's Your Reaction?






