Thangalaan Box Office Collection Day 1: சீயான் விக்ரமின் தங்கலான் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்!

Thangalaan Box Office Collection Day 1 : சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் அதிக எதிர்பார்ப்புடன் நேற்று வெளியானது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில், முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து படக்குழு அதிகாரப்பூர்மாக அறிவித்துள்ளது.

Aug 16, 2024 - 07:16
Aug 16, 2024 - 13:44
 0
Thangalaan Box Office Collection Day 1: சீயான் விக்ரமின் தங்கலான் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்!
தங்கலான் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்

Thangalaan Box Office Collection Day 1 : சீயான் விக்ரம் – பா ரஞ்சித் கூட்டணியில் உருவான தங்கலான் திரைப்படம், சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று ரிலீஸானது. உலகம் முழுவதும் 2000க்கும் அதிகமான திரைகளில் வெளியான இத்திரைப்படத்தின் ஆன்லைன் புக்கிங் நன்றாக இருந்ததாக புக் மை ஷோ ரிப்போர்ட் கொடுத்திருந்தது. இதனால் முதல் நாளான நேற்று தங்கலான் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாக இருந்தன. தமிழ்நாடு முழுவதும் தங்கலான் வெளியான திரையரங்குகளில், 90 சதவீதக்கும் அதிகமான டிக்கெட்டுகள் புக் ஆகின. அதேபோல், திரையரங்குகளில் சீயான் விக்ரம் ரசிகர்களின் கொண்டாட்டம் களைகட்டியது.

கோலார் தங்கச் சுரங்கத்தை பின்னணியாக வைத்து நில அரசியல் பேசும் படமாக உருவாகியுள்ளது தங்கலான்(Thangalaan). அதாவது, கோலார் தங்கச் சுரங்கம் உருவானதில் வட ஆற்காட்டைச் சேர்ந்த தங்கலான், அவரது ஊரைச் சேர்ந்தவர்களின் பங்கு என்னவென்பதை நில அரசியல் பின்னணியில் இயக்கியுள்ளார் பா ரஞ்சித். இது அவரது வழக்கமான டெம்ப்ளேட்டாக இருந்தாலும் கனவுலகம், சூனியக்காரி, மன பிரம்மை என சில ஃபேண்டஸி அம்சங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், ஒருசில வசனங்கள் சரியாக புரியாமல் போனதும் படத்துக்கு மைனஸ்ஸாக காணப்படுகிறது.

தங்கலான் படத்தில்(Thangalaan Movie) சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரின் நடிப்பு செம மிரட்டலாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி இருந்தனர். கண்டிப்பாக இந்தப் படத்தின் நடிப்புக்காக விக்ரமுக்கு விருதுகள் கிடைக்கும் எனவும் ரசிகர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். அதேநேரம் தங்கலான் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எதிர்பார்த்ததைவிட சுமாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கலான் சீயான் விக்ரம் – பா ரஞ்சித் என மிரட்டலான கூட்டணியில் உருவானதால், மிகப் பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், தங்கலான் படத்தின் முதல் நாள் வசூல்(Thangalaan Box Office Collection Day 1), 26.44 கோடி ரூபாய் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 15 கோடி வரையும், கேரளா, ஆந்திரா, தெலங்கானா உட்பட உலகம் முழுவதும் 11.44 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தங்கலான் வெளியாகும் முன்பே இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்(Thangalaan Box Office Predictions) 150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலிக்கும் என படக்குழு நம்பிக்கையாக இருந்தது. அதேப்போல் தற்போதைய நிலவரப்படி பார்த்தால் தங்கலானுக்கு பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது என்றே தெரிகிறது. 

மேலும் படிக்க - டிமான்டி காலனி 2 டிவிட்டர் விமர்சனம்

அதேநேரம் செப்டம்பர் 5ம் தேதி விஜய்யின் கோட் திரைப்படம் வெளியாகிறது. அதற்கு முன்பு வரை தங்கலானுக்கு தான் ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ்(Box Office) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக தங்கலான் திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே கலெக்ஷன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow