Demonte Colony 2 Review in Tamil : அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளியான டிமான்டி காலனி திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. தமிழில் வெளியான சிறந்த ஹாரர் த்ரில்லர் படங்களில் டிமான்டி காலனியும் ஒன்று. அருள்நிதி, ரமேஷ் திலக், எம்.எஸ் பாஸ்கர், அபிஷேக் ஜோசப் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். அருள்நிதி தனது நண்பர்களுடன் டிமான்டி காலனிக்கு செல்ல, அதன்பிறகு நடக்கும் ஹாரர் த்ரில்லர் சம்பவங்கள் தான் டிமான்டி காலனி(Demonte Colony) படத்தின் கதை.
அருள்நிதியின் நடிப்பு, அஜய் ஞானமுத்துவின் மேக்கிங், திரைக்கதை, மிரட்டலான பிஜிஎம் என டிமான்டி காலனி படம் ரசிகர்களுக்கு தரமான ஹாரர் ட்ரீட்டாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது டிமான்டி காலனி(Demonte Colony Part - 2) 2ம் பாகம் வெளியாகியுள்ளது. இந்தமுறை அருள்நிதியுடன் பிரியா பவானி சங்கரும் நடிக்க, சில தினங்களுக்கு முன்னர் வெளியான ட்ரெய்லர், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்று வெளியான டிமான்டி காலனி 2ம் பாகத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன.
டிமான்டி காலனி 2(Demonte Colony 2) முதல் பாதி நன்றாக தொடங்கி இடைவேளையில் உச்சக்கட்ட எதிர்பார்ப்புடன் முடிகிறது. அப்படியே இரண்டாம் பாதியும் சஸ்பென்ஸாக இருப்பதாக நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். அதேபோல், டிமான்டி காலனி முதல் பாகத்தை ரீ-கால் செய்துவிட்டு இரண்டாம் பாகம் தொடங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், டிமான்டி காலனி 2ம் பாகத்தின் பாசிட்டிவான விஷயம் திரைக்கதை தான், ஆனால், இரைச்சலான பிஜிஎம், தெளிவு இல்லாத கதை, லேக் ஆகும் காட்சிகள் படத்திற்கு பெரிய மைனஸ் என நெட்டிசன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சீட் நுணியில் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு ஹாரர் காட்சிகள் இல்லை என்பதையும் அவர் விமர்சனமாக முன்வைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக இந்தப் படத்துக்கு 5க்கு 1.7 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் இன்னொரு ரசிகர் டிமான்டி காலனி 2ம் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். வாவ்! டிமான்டி காலனி 2 திரைக்கதை தரமாக உள்ளது. அஜய் ஞானமுத்துவின் திரைக்கதை கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைக்கும். மகாராஜாவுக்கு பின்னர் டிமான்டி காலனி 2 திரைக்கதை தான் சூப்பர், என் வாழ்வில் இதுவரை இப்படியொரு ஹாரர் மூவி பார்த்தது கிடையாது. படம் முடியும் வரை 2.30 மணி நேரத்துக்கு எனது செல்போனை எடுக்கவே இல்லை. பிரியானி பவானி சங்கர் மீதான அனைத்து நெகட்டிவ் ட்ரோல்களுக்கும் டிமான்டி காலனி 2 பதிலடி கொடுக்கும். படத்தின் கதைக்கும் திரைக்கதைக்கும் அருள்நிதி சப்போர்ட் செய்துள்ளார் என பாராட்டியுள்ளார்.
அதேபோல், டிமான்டி காலனி முதல் பாகத்தை சுருக்கமாக சொல்லிவிட்டு இரண்டாம் பாகத்தின் கதைக்குள் படம் செல்கிறது. மேலும் டிமான்டி காலனி 2 முதல் பாதி சூப்பர் எனவும், இடைவேளைக்குப் பின்னர் சஸ்பென்ஸாக இருப்பதாகவும் ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். முதல் பாகத்தை டிமான்டி காலனி 2ல்(Demonte Colony 2) இயக்குநர் கனெக்ட் செய்தவிதம் சூப்பர், அருள்நிதியின் கேரக்டர் ரொம்ப சஸ்பென்ஸாக இருந்தது. தனித்துவமான கதைகளை செலக்ட் செய்யும் அருள்நிதி, டிமான்டி காலனி 2ம் பாகத்திலும் அதனை பக்காவாக ஒர்க்அவுட் செய்துள்ளார். பிரியா பவானி சங்கர் கீ ரோலில் நடித்துள்ளதாகவும், பிக் பாஸ் அர்ச்சனா போர்ஷன் குறைவாக இருந்தாலும், அராத்து ரோலில் அசத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தங்கலான், ரகு தாத்தா படங்களுடன் வெளியாகியுள்ள டிமான்டி காலனி 2(Demonte Colony 2 Review in Tamil), இந்த ரேஸில் இரண்டாம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளதால், பாக்ஸ் ஆபிஸில் ஒருவாரம் வரை தாக்குப்பிடிக்கும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.