DAREDEVIL : அஜித் சொன்ன NO... சத்யராஜுக்கு பதில் பார்த்திபன்? அதற்கு கரணம் யார் தெரியுமா ?

DAREDEVIL : அஜித் சொன்ன NO... சத்யராஜுக்கு பதில் பார்த்திபன்? அதற்கு கரணம் யார் தெரியுமா ?

அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் Daredevil படத்தில் சத்யராஜுக்குப் பதிலாக பார்த்திபன் தேர்வு செய்யப்பட்டதாகவும், அதற்கு காரணம் CM தான் எனவும் வெளியாகியுள்ள தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Author: Santhosh சினிமா

அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய திரைப்படம் "Daredevil" குறித்து தற்போது கோலிவுட் வட்டாரத்தில் புதிய தகவல் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சத்யராஜுக்கு பதிலாக நடிகர் பார்த்திபனை படத்தில் நடிக்க வைக்க அஜித்குமார் விரும்பியதாக வெளியாகியுள்ள தகவல் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அஜித்குமார் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவான 'குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து மீண்டும் இருவரும் இணையும் படம் Daredevil. இந்தப் படத்தை அஜித்குமாரின் மனைவி ஷாலினி அஜித்குமார் தயாரிக்கிறார். படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அளித்த பேட்டியில், இப்படத்தில் நடிகர்கள் பிரபு, பார்த்திபன், சுனில் மற்றும் நடிகை ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இங்குதான் ட்விஸ்ட்டே , முதலில் பார்த்திபனின் கதாபாத்திரத்தில் சத்யராஜை நடிக்க வைக்கத் திட்டமிடப்பட்டதாகவும், பின்னர் அந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்குப் பின்னணியில் நடிகர் விஜய் தொடர்பான விவகாரம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் குறித்து நடிகர் சத்யராஜ் தெரிவித்த அரசியல் விமர்சனங்கள் அஜித்குமாரின் கவனத்துக்குச் சென்றதாகவும், நண்பர் விஜய்க்கு ஆதரவாக இருக்கும் அஜித், சத்யராஜுடன் இணைந்து நடிப்பதை விரும்பவில்லை என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

குறிப்பாக, மோட்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் கார் ரேஸிங் தொடர்பான முயற்சிகளுக்கு விஜய் ஆதரவு தெரிவித்திருந்ததை அஜித் பாராட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே சத்யராஜுக்குப் பதிலாக பார்த்திபனைத் தேர்வு செய்ய அஜித் விரும்பியதாகச் சொல்லப்படுகிறது.

இருப்பினும், இந்தத் தகவல்கள் அனைத்தும் தற்போது வெளியாகியுள்ள சினிமா வட்டாரச் செய்திகளாக மட்டுமே உள்ளன. சத்யராஜ் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவோ, பின்னர் நீக்கப்பட்டதாகவோ படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தயாரிப்பு நிறுவனமான Brave Hearts Production தரப்பிலிருந்தும் இதுவரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை.

இதற்கிடையே, Daredevil படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தொடங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சத்யராஜ் – விஜய் விவகாரத்தால் Daredevil படத்தில் நடிகர் மாற்றம் ஏற்பட்டதா? அல்லது இது வெறும் சினிமா வட்டார வதந்தியா? படக்குழுவின் அதிகாரப்பூர்வ விளக்கம் வந்தால் மட்டுமே இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும்.