அனிருத்- காவ்யா மாறன் திருமணம்: RECEPTION-ல் பங்கேற்கும் VIP-க்கள் லிஸ்ட் ரெடி!

அனிருத்- காவ்யா மாறன் திருமணம்: RECEPTION-ல் பங்கேற்கும் VIP-க்கள் லிஸ்ட் ரெடி!

இசையமைப்பாளர் அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் உள்ளிட்டப் பல வி.ஐ.பி-க்கள் பங்கேற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Author: Christon சினிமா

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் 'சன்ரைசர்ஸ் ஹைதராபாத்' அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்று வருகின்றன.

வெளியான தகவல்களின்படி, அனிருத் - காவ்யா மாறன் திருமணம் வரும் நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கிரீஸ் நாட்டில் எளிமையான முறையில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, நவம்பர் 21-ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல் மற்றும் திரை உலகைச் சேர்ந்த முன்னணி பிரமுகர்கள் பலர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் விருந்தினர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

சினிமா துறையில் இருந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், தனுஷ், அஜித் குமார் - ஷாலினி தம்பதி, அல்லு அர்ஜுன், சிவகார்த்திகேயன், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் உள்ளிட்டப் பல முக்கியப் பிரபலங்கள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஐ.பி.எல் தொடர்பான பிரபலங்களும் கிரிக்கெட் வீரர்களும் இதில் பங்கேற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இந்தத் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகள் குறித்து அனிருத் அல்லது காவ்யா மாறன் குடும்பத்தினர் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.