Vanitha Vijayakumar Marriage : மீண்டும் திருமணம் பந்தத்தில் இணையும் வனிதா..? அட மாப்பிள்ளை யாருன்னு பாருங்க!

Vanitha Vijayakumar Marriage with Robert Master : வனிதா விஜயகுமார் தனது அடுத்த திருமணம் குறித்து இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ள போட்டோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Oct 1, 2024 - 15:21
Oct 1, 2024 - 17:18
 0
Vanitha Vijayakumar Marriage : மீண்டும் திருமணம் பந்தத்தில் இணையும் வனிதா..? அட மாப்பிள்ளை யாருன்னு பாருங்க!
வனிதா - ராபர்ட் மாஸ்டர் திருமணம்

Vanitha Vijayakumar Marriage with Robert Master : முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகளாக சினிமாவில் அறிமுகமானவர் வனிதா. முதல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக என்ட்ரி கொடுத்தார் வனிதா. 1995ம் ஆண்டு விஜய் ஹீரோவாக நடித்த சந்திரலேகா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த வனிதா, அடுத்து ராஜ்கிரணுடன் மாணிக்கம் படத்திலும் நடித்தார். வனிதா முன்னணியாக நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை சுற்றி சர்ச்சைகள் மட்டுமே வலம் வரத் தொடங்கின. 

2000ம் ஆண்டு ஆகஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட வனிதா, 2007ல் அவரை விவாகரத்து செய்தார். அதன்பின்னர் தொழிலதிபர் ஆனந்த் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார் வனிதா. இந்த திருமண வாழ்க்கையும் ஐந்தே ஆண்டுகளில் பிரிவை சந்தித்தது. அதன்படி இருவரும் 2012ம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டனர். அதன்பின்னர் சிங்கிளாக வலம் வந்த வனிதாவுக்கு, டான்ஸ் மாஸ்டருடன் காதல் என செய்திகள் வெளியாகின. இதனால் இருவரும் சீக்கிரமே திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரம் வனிதாவும் ராபர்ட்டும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் 2020ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார் வனிதா. யார் கண் பட்டதோ தெரியவில்லை, இந்த திருமண வாழ்க்கையும் விவாகரத்தில் போய் நின்றது. அதோடு அதே ஆண்டில் பீட்டர் பால் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா, அங்கு அடித்த அட்ராசிட்டிகளால் மீண்டும் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின்னர் அடிக்கடி யூடியூப் சேனல்களுக்கு பேட்டிக் கொடுப்பதும், பிக் பாஸ் நிகழ்ச்சிகளை விமர்சிப்பதும் வனிதாவின் வழக்கமான வேலையாக இருந்தது.

இந்நிலையில், தனது இன்ஸ்டாவில் வனிதா பதிவிட்டுள்ள போட்டோ ரசிகர்களுக்கு ஷாக்கிங் கொடுத்துள்ளது. அதாவது வரும் 5ம் தேதி தனக்கும் ராபர்ட் மாஸ்டருக்கும் திருமணம் என பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் வனிதாவும் ராபர்ட் மாஸ்டரும் கடற்கரையில் ரொமான்ஸ் செய்தபடி க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளனர். இது உண்மையான திருமண அழைப்பிதழ் தானா, அல்லது ஏதும் படத்தின் ப்ரோமோஷன் போஸ்டரா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். வனிதாவும் ராபார்ட் மாஸ்டரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். அதன் ப்ரோமோஷன் தான் வனிதாவின் இன்ஸ்டா போஸ்ட் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பிக் பாஸ் சீசன் 6ல் வனிதாவின் ரெக்கமண்ட்டின் பேரில் போட்டியாளராக பங்கேற்றார் ராபர்ட் மாஸ்டர். அப்போது ராபர்ட் மாஸ்டருக்கு ரச்சிதா மீது ஒரு கண் இருந்தது. இதனால் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நடக்காமல் போனது. இந்நிலையில், தற்போது வனிதா – ராபர்ட் மாஸ்டர் இருவருக்கும் வரும் 5ம் தேதி திருமணம் என வெளியான அறிவிப்பு வைரலாகி வருகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow