GOAT OTT Release: ஓடிடியில் வெளியாகும் விஜய்யின் கோட்... எப்போ, எந்த பிளாட்ஃபார்ம்ன்னு தெரியுமா..?

விஜய் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப் பெற்ற கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Oct 1, 2024 - 11:51
Oct 1, 2024 - 14:26
 0
GOAT OTT Release: ஓடிடியில் வெளியாகும் விஜய்யின் கோட்... எப்போ, எந்த பிளாட்ஃபார்ம்ன்னு தெரியுமா..?
GOAT ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை: தளபதி விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் கோட் என்ற தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. விஜய்யுடன் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், யோகி பாபு, சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடித்த கோட் படத்துக்கு, முதல் நாளில் மிகப் பெரிய ஓபனிங் கிடைத்தது. இதனால் கோட் ரிலீஸான முதல் நாளில் 126 கோடி ரூபாய் வரை வசூலித்து மாஸ் காட்டியது.

அதேநேரம் விஜய் ரசிகர்கள் தவிர மற்றவர்கள் படம் எதிர்பார்த்தளவில் இல்லையென நெகட்டிவாக விமர்சனம் செய்திருந்தனர். முக்கியமாக இயக்குநர் வெங்கட் பிரபு எப்போதும் திரைக்கதையில் ஸ்கோர் செய்துவிடுவார். ஆனால், கோட் படத்தின் இரண்டாம் பாதியில் வெங்கட் பிரபுவின் மேஜிக் எதுவும் எடுபடவில்லை என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். அதேபோல், விஜய்யின் டீ-ஏஜிங் கெட்டப்பும் விமர்சனங்களுக்கு உள்ளானது. விஜய் ரசிகர்களுக்கு இந்த டீ-ஏஜிங் கெட்டப் பிடித்திருந்தாலும், பொதுவான ஆடியன்ஸ் இதனை ரசிக்கவில்லை. 

இன்னொரு பக்கம் மறைந்த கேப்டன் விஜயகாந்தை ஏஐ டெக்னாலஜி மூலம் ஒரு காட்சியில் பயன்படுத்தியிருந்தார் வெங்கட் பிரபு. படம் வெளியாகும் முன்னர் கேப்டன் விஜயகாந்தின் கேரக்டரை பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வமாக இருந்தனர். ஆனால், அதிலும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. அதேபோல், யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள், பின்னணி இசை ஆகியவையும் சுமார் ரகமாகவே இருந்தது. இதனால் கோட் படத்தின் வசூல் எதிர்பார்த்தளவிற்கு இல்லை என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு திடீரென அறிவித்துள்ளது. அதன்படி விஜய்யின் கோட் திரைப்படம், வரும் 3ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் கோட் படம் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்தப் படம் அக்டோபர் இறுதியில் தான் ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், வேட்டையன் உட்பட பல படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாகின்றன. இதனால் இனிமேல் கோட் படத்துக்கு தியேட்டரில் வரவேற்பு இருக்காது எனத் தெரிகிறது.

இதனையடுத்து தான் கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு திடீரென அறிவித்துள்ளது. திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதத்திற்குள்ளாகவே கோட் திரைப்படம் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. விஜய்யின் கோட் படத்தை தியேட்டரில் மிஸ் செய்த ரசிகர்கள், இப்போது ஓடிடியில் பார்க்க ரெடியாகிவிட்டனர். முக்கியமாக ஓடிடியில் வெளியாகும் விஜய்யின் கோட் திரைப்படம், டைரக்டர் வெங்கட் பிரபு வெர்ஷனாக, அதாவது எடிட்டிங்கில் நீக்கப்பட்ட 40 நிமிட காட்சிகளுடன் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

View this post on Instagram

A post shared by Netflix India (@netflix_in)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow