Meiyazhagan Public Review : “அன்பே சிவம் அப்டேட் வெர்ஷன்..” கார்த்தியின் மெய்யழகன் பப்ளிக் விமர்சனம்!
Meiyazhagan Movie Public Review in Tamil : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
Meiyazhagan Movie Public Review in Tamil : பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி இணைந்து நடித்துள்ள திரைப்படம் மெய்யழகன். 96 படம் மூலம் பிரபலமான பிரேம்குமார், அதே ஸ்டைலில் மீண்டும் ஒரு நாஸ்டாலஜியா ஹிட் கொடுத்துள்ளார். இன்று திரையரங்குகளில் வெளியான மெய்யழகன் படத்தை ஃபேமிலி ஆடியன்ஸ் கொண்டாடி வருகின்றனர். சிட்டியில் வசித்து வரும் அரவிந்த் சாமி, நீண்ட வருடங்களுக்குப் பின்னர் சொந்த ஊர் செல்வதும், அங்கு நடக்கும் சம்பவங்கள் தான் மெய்யழகன் படத்தின் கதை எனத் தெரிகிறது. சொந்த ஊருக்குச் செல்லும் அரவிந்த் சாமி அங்கு தனது பழைய நினைவுகளை மீட்டெடுப்பதும், அவருக்கும் கார்த்திக்கும் இடையேயான உரையாடல்களும் தான் மெய்யழகன் படத்தின் கதை என ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
அதனை ஃபீல்குட் ரசனையுடன் ஸ்க்ரீனிங் செய்துள்ள பிரேம்குமார், கதை முழுவதும் ரசிகர்களுக்கு ஒரு நாவல் படித்த அனுபவத்தை கொடுத்துள்ளதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர். கிட்டத்தட்ட அன்பே சிவம் மாதிரி, கார்த்தி, அரவிந்த் சாமி இருவருக்கும் இடையேயான ஒரு நாள் பயணம் தான் மெய்யழகன்(Meiyazhagan). சமீபமா திரையில் பார்க்காத நிறைய அழகான, Tender-ஆன மெல்லிய கவித்துவமான உணர்வுகள் படத்தில் நிறைய இருப்பதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.
கார்த்தியோட கரியர்ல அவரோட நடிப்புக்கு மெய்யழகன்(Meiyazhagan Karthi)படத்தை பெஸ்ட்ன்னு சொல்லலாம். அவரோட பார்வை, உடல்மொழி, வசன உச்சரிப்பு, முகபாவங்கள், வாய்ஸ் ஆக்டிங்ன்னு எல்லாமே சிறப்பா இருக்கு. ஒரு வெள்ளந்தியான அதேநேரம் விவரமான, விஷயம் தெரிஞ்ச ஆளுங்குற ரொம்ப ட்ரிக்கியான கேரக்டரில் கார்த்தி நடித்துள்ளார். கார்த்தி பெரிதாக நடித்த மாதிரி தெரியவில்லை, அவ்வளவு எதார்த்தமா நடிச்சிருக்கார். ஆனா, அரவிந்த் சாமி கார்த்தி அளவுக்கு நடிக்கல, இருந்தாலும் நல்ல முயற்சி பண்ணியிருக்காரு என ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். ஊரை விட்டு போயிட்டா தமிழ் மறக்கும், வரலாறு மறக்கும், உறவுகள் மறக்கும் சரி, வலது பக்கம்ன்னு சொன்னா, Right சைட்னு கூடவா மறக்கும்?, இது பெரிய லாஜிக் மிஸ்டேக் எனவும் விமர்சித்துள்ளனர்.
அதேபோல், ஒரு கதைக்களத்தை உருவாக்கி அந்த சூழலில் மட்டும் சில கேரக்டர்களை நடிக்க வச்சிருக்காங்க. அதனால் கார்த்தி, அரவிந்த் சாமி தவிர மற்ற கேரக்டர்கள் பற்றியும் பெரிதாக மென்னக்கெடல் செய்யல. அதேபோல், கதையும் ஒரே இடத்தில் நின்றுவிட்டதை போல கொஞ்சம் அயர்ச்சியாக உள்ளது என நெகட்டிவாகவும் விமர்சனங்கள் வந்துள்ளன. மேலும், ஜல்லிக்கட்டுல இருக்கற சாதிய விஷயங்களையும் அதன்மீது மக்களுக்கு உள்ள சந்தேகங்களையும் கேள்விகளையும் பிரச்சனைகளயும் பேசவே இல்லை. அது இல்லாமல் அவ்ளோ பெரிய காட்சியில் ஜல்லிக்கட்டை வெறும் வீர விளையாட்டாக மட்டுமே காட்டியது, இப்போதுள்ள சூழலுக்கு ரசிக்க முடியவில்லை எனவும் கூறியுள்ளனர்.
மொத்தமாக மெய்யழகன் திரைப்படம்(Meiyazhagan Movie) வழக்கமான சினிமா ஸ்டைலில் இருந்து விலகி, ஒரு நாவல் படிக்கும் அனுபவத்தை கொடுக்கும் அதில், சில பக்கங்கள் உங்களுக்கு பிடிக்கும், சில இடங்கள் மெதுவா போகுற மாதிரி தோணும், சில இடங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும், சில இடங்கள் சீக்கிரம் முடிவை சொல்லுங்கப்பானு படபடக்க வைக்கும் என ரசிகர்கள் கூறியுள்ளனர்.
What's Your Reaction?