இந்தியா

நாட்டின் முதல் கிளேட் 1B தொற்று கண்டுபிடிப்பு... அவசரநிலை அறிவிக்க முடிவு!

Monkey Pox Virus Clade 1B Positive in Kerala : நாட்டிலேயே குரங்கம்மையின் திரிபான கிளேட் 1B தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல் நபர் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளார்.

நாட்டின் முதல் கிளேட் 1B தொற்று கண்டுபிடிப்பு... அவசரநிலை அறிவிக்க முடிவு!
நாட்டின் முதல் கிளேட் 1B தொற்று கண்டுபிடிப்பு... அவசரநிலை அறிவிக்க முடிவு!

Monkey Pox Virus Clade 1B Positive in Kerala : கடந்த சில ஆண்டுகளாக புதுப்புது வைரஸ்கள் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், அந்த பட்டியலில் தற்போது சேர்ந்திருப்பது குரங்கம்மை. ஆப்பிரிக்க நாடான காங்கோவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட குரங்கம்மை தொற்று, இப்போது மற்ற நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டத் தொடங்கியுள்ளது. குரங்கம்மைக்கு 100க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியுள்ளதால் உலக சுகாதார மையமும் விழித்துக் கொண்டுள்ளது. 

குரங்கம்மை நோய்(Monkey Pox) குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி உலக நாடுகள் அனைத்துக்கும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக மக்களுக்கு புதிய வில்லனாக உருவெடுத்துள்ள குரங்கம்மை, இந்தியாவிலும் தனது கொடூர கால்களை பதித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த இளைஞருக்கு குரங்கம்மை அறிகுறிகள் இருப்பதாக தெரியவந்தது. 

அவருடைய ரத்த மாதிரிகள் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. பரிசோதனையின் முடிவில் அந்த இளைஞருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து விளக்கம் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்,  'இளைஞருக்கு கிளேட் 2 வகை தொற்று பாதிப்பு தான் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த 38 வயதுடைய நபர் ஒருவருக்கு குரங்கம்மை இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் இவருக்கு குரங்கம்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த இளைஞர், கிளேட் 1B தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே குரங்கம்மையின் திரிபான கிளேட் 1B தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல் நபர் இவர் ஆவார். எனவே 'சர்வதேச அக்கறையின் பொது சுகாதார அவசரநிலை' அறிவிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. 

மேலும் படிக்க: முதல்வராக சொன்னேன், பிரதமராக கேட்டார்.. மோடியை சந்தித்த பின் ஸ்டாலின் விளக்கம்

குரங்கம்மை அறிகுறிகள்:

காய்ச்சல், தலைவலி, முதுகுவலி, தசைவலி போன்றவை ஆரம்பகால நோய் அறிகுறிகளாகும். காய்ச்சல் வந்தவுடன், தடிப்புகள் ஏற்படும். உடலின் மற்ற இடங்களில் பரவுவதற்கு முன்பு முகத்தில்தான் தடிப்புகள் ஏற்படும். உள்ளங்கை, கைகள் மற்றும் உள்ளங்கால்களிலும் இந்த அம்மை பரவும். இந்த தடிப்புகள் அரிப்பையும், வலியையும் ஏற்படுத்தும். சில நேரங்களில் இந்த நோய் உயிரைக்கொல்லும் தொற்றாக மாறிவிடும் எனவும் குறிப்பாக குழந்தைகள் போன்ற மிகவும் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு அதிக அச்சுறுத்தலை இந்த அம்மை நோய் ஏற்படுத்தும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.