சினிமா

அம்மனாக மாறிய நயன்தாரா! மூக்குத்தி அம்மன் 2... ஆரம்பமே அமர்க்களம்!

மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை விழாவில் நயன்தாரா பங்கேற்றிருந்தது கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அஜித் ரூட்டில் எந்த பட நிகழ்ச்சிகளுக்கும் செல்லாமல் கெத்து காட்டி வந்த நயன், மூக்குத்தி அம்மன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றது பல்வேறு விமர்சங்களை முன்வைத்துள்ளது.

அம்மனாக மாறிய நயன்தாரா!  மூக்குத்தி அம்மன் 2...  ஆரம்பமே அமர்க்களம்!
அம்மனாக மாறிய நயன்தாரா! மூக்குத்தி அம்மன் 2... ஆரம்பமே அமர்க்களம்!

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பெரிய ரவுண்ட் அடித்த நயன்தாரா, கடந்த சில மாதங்களாகவே அடுத்தடுத்து பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார். தனுஷுடன் ஏற்பட்ட நானும் ரவுடி தான் படத்தின் காப்பி ரைட்ஸ் பஞ்சாயத்து, நயனுக்கு பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டுவிதமாகவும் பிரஷர் கொடுத்தது. அதேபோல், நயன்தாரா நடித்த படங்களும் அவருக்கு பெரிதாக சக்சஸ் கொடுக்கவில்லை. இதற்கெல்லாம் சேர்த்து வைத்து வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்க, மீண்டும் ‘மூக்குத்தி அம்மன்’ அவதாராத்தை நயன்தாரா எடுத்துள்ளார்.

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம், கடந்த 2020ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் 2ம் பாகத்தின் இயக்குநராக சுந்தர் சி கமிட்டாக, மீண்டும் அம்மன் அவதாரம் எடுத்துள்ளார் நயன். வேல்ஸ் பிக்சர்ஸ் ஐசரி கணேஷ் தயாரிக்கும் மூக்குத்தி அம்மன் 2, 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகிறது. இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை விழா, மிக பிரம்மாண்டமாக நடந்தது. இதில், சுந்தர் சி,. நயன்தாரா, ஐசரி கணேஷ், ரவிமோகன், குஷ்பு, மீனா, யோகி பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த பூஜை விழாவுக்காக, சென்னை பிரசாந்த் ஸ்டூயோவில், கோயில் போல பிரம்மாண்டமான செட் போடப்பட்டு பூஜை போடப்பட்டது. வழக்கமாக தான் நடிக்கும் படங்களின் பூஜை விழா உட்பட ஆடியோ லான்ச், சக்சஸ் மீட் என எதற்கும் செல்லமாட்டார் நயன். ஆனால், மூக்குத்தி அம்மன் 2 படத்துக்காக தனது ரூல்ஸை தானே பிரேக் செய்துள்ளது கோலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

பூஜை விழாவுக்கு சிவப்பு நிற சேலை அணிந்து, அம்மன் லுக்கிலேயே வந்து சென்றார் நயன். அதேபோல், மூக்குத்தி அம்மன் 2-வில் நடிப்பதற்காக, ஒரு மாதமாக நயன் தனது குடும்பத்தோடு விரதம் இருந்ததாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியதும் ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ்ஸாக அமைந்தது. நயனின் இந்த மாற்றம் அவருக்கு மட்டுமே வெளிச்சம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தமிழில் ஒரு ஹீரோயின் லீடிங் ரோலில் நடிக்கும் படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளது இதுவே முதன்முறை என சொல்லப்படுகிறது. நயன்தாராவுடன் ரெஜினா, கன்னட நடிகர் துனியா விஜய், யோகி பாபு உட்பட பலரும் மூக்குத்தி அம்மன் 2-வில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மூக்குத்தி அம்மன் 2 பூஜை விழாவில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய டிடி, சூப்பர் சிங்கர் அருணா உட்பட மேலும் சிலருக்கு வைர மூக்குத்தியை பரிசாக கொடுத்து அனைவரையும் மிரள வைத்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். ஒட்டுமொத்தமாக மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ஆரம்பமே, அமர்க்களமான சம்பவமாக அமைந்துள்ளது.