காத்துவாக்குல ரெண்டு காதல்..யாரு சாமி இந்த மாப்பிள்ளை?
தெலங்கானா மாநிலத்தில் ஒரே மணமேடையில் இரு பெண்களை ஒருவர் மணம் முடித்துள்ள சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

90-ஸ் கிட்ஸ்கள் பலரும், நமக்கு கல்யாணம்ன்னு ஒன்னு நடக்குமா என கட்டிலில் மெத்தையிட்டு ஏங்கிக் கிடக்க, அவர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக்கட்டிக் கொள்ளும்விதமாக நடந்துள்ளது ஒரு சம்பவம். காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற பட தலைப்புக்கு பொருத்தமான அந்தச் சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்.
”தம்பி, எப்ப கல்யாணம்..? தம்பி, உனக்கு பொண்ணு பாத்தாச்சா..? தம்பி, எப்பப்பா லைஃப்ல செட்டில் ஆகப் போற..?” இப்படி தினம் தினம் பல கேள்விக் கனைகளை எதிர்கொண்டபடி நாட்களை கடத்தி வரும் 90ஸ் கிட்ஸ்களுக்கு, இந்த செய்தி மனதை ரனமாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆம்! 90ஸ் கிட்ஸ்களில், அவனவன் பெண் கிடைக்காமல் எப்படா கல்யாணம் நடக்கும் என எட்டு திசையிலும் வழி மேல் விழி வைத்து தவம் கிடக்கின்றனர். ஆனால், தெலங்கானாவில் ஒரே மேடையில் தனது இரண்டு காதலிகளையும் திருமணம் செய்து கெத்து காட்டியுள்ளார் சூர்யதேவ் என்ற 2கே கிட்ஸ் இளைஞர்.
ஒரே மேடையில் திருமணம்:
தெலங்கானாவின் லிங்கபூர் பகுதியில் உள்ள கும்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யதேவ். “இவருக்கு இதேதான் வேலை” என்பது போல, ஒரேநேரத்தில் லால் தேவி, ஜல்காரி தேவி என்ற இரண்டு பெண்களை காதலித்துள்ளார். லால் தேவியையும் ஜல்காரி தேவியையும் உருகி காதலித்த சூர்யதேவ், திருமணம் என வரும்போது, ஒருவரை மட்டும் விட்டுக்கொடுக்க மனம் வரவில்லை. இதனால் கட்டினா ரெண்டு பேரையும் கட்டிக்கணும் என முடிவு செய்ததோடு, இதனை குடும்பத்தினரிடமும் கிராம மக்களிடமும் கூறியுள்ளார். ஆரம்பத்தில் இதற்கு கொஞ்சம் எதிர்ப்புகள் கிளம்பினாலும், காதலிகள் இருவரும் சூர்யதேவுடன் ஒன்றாக குடும்பம் நடத்த ரெடி என க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டனர்.
இதனால், வேறு வழியே இல்லாமல், மூவருக்கும், அதாவது லால் தேவி, ஜல்காரி தேவி இருவரையும் சூர்யதேவ் ஒரே மேடையில் வைத்து திருமணம் செய்துகொண்டார். முன்னதாக சூர்யதேவ் நடுவிலும், காதலிகளை தனது இரண்டு பக்கமும் நிற்க வைத்து போட்டோ எடுத்து, அதையே திருமண பத்திரிகையாக கிராம மக்களுக்கு கொடுத்து மாஸ் காட்டியுள்ளார். அதேபோல், திருமண சடங்குகளிலும் பாரபட்சம் காட்டாமல், இருவருடனும் ஒன்றாக மேடையில் வலம் வந்தது, வீடியோவாக வைரலாகி வருகிறது. இந்த திருமணத்தில் கிராம மக்களும் கலந்துகொண்டு மூவரையும் வாழ்த்திச் சென்றனர். தெலங்கானா, ஜார்க்கண்ட் பகுதிகளில், இதற்கு முன்பும் இதேபோல் திருமணங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more: 'உசுரு முக்கியம் பிகிலு'-காதலில் விழுந்த மனைவி..உஷாரான கணவன்!
What's Your Reaction?






