IPL 2025: RCB அணியை எதிர்கொள்ளும் KKR.. எங்கு? எப்படி? பார்க்கலாம் முழுவிவரம் இதோ!

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 18வது சீசன் TATA ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது.  இந்த சீசனில் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

Mar 22, 2025 - 10:50
Mar 23, 2025 - 09:18
 0
IPL 2025:  RCB அணியை எதிர்கொள்ளும் KKR.. எங்கு? எப்படி? பார்க்கலாம் முழுவிவரம் இதோ!
IPL 2025: தொடக்க ஆட்டத்தில் RCB அணியை எதிர்கொள்ளும் KKR.. எங்கு, எப்படி பார்க்கலாம்..!

கிரிகெட்டின் திருவிழாவாக ரசிகர்கள் கொண்டாடும் ஐபிஎல் போட்டிகளுக்கு இந்தியாவில் நாளுக்கு நாள் மவுசு கூடிக்கொண்டே செல்கிறது.  கடந்த 2008 ஆம் ஆண்டு பிசிசிஐ சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபிஎல் தொடருக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலகளவில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது.   உலககோப்பை, சாம்பியன் டிராபி, கிரிக்கெட் தொடருக்கு கொடுக்கும் அதே ஆதரவு ஐபிஎல் தொடருக்கும் உள்ளதை பார்க்க முடிகிறது.  டி20 தொடரான ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் 18-வது சீசனை எட்டியுள்ளது. 

ஈடன் கார்டன் மைதானம்

ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளது. ராஜஸ்தான் அணி 1 முறையும், டெக்கான் அணி 1 முறையும், கொல்கத்தா அணி 3 முறையும், சன்ரைசர்ஸ் அணி 1 முறையும், குஜராத் அணி 1 முறையும் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 18 வது சீசன் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி மே 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

2 பிரிவுகள்

ஐபிஎல் 2025 18-வது சீசனில் மொத்தம் 10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 'ஏ' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.  'பி' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறையும், எதிர்பிரிவில் ஒரு அணியுடன் மட்டும் 2 முறை, மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு முறையும் லீக்கில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு அணியும் தலா 14 போட்டிகளில் விளையாட உள்ளன. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். நாடு முழுவதும் உள்ள சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை உள்ளிட்ட 13 மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. 

இலவச ஒளிபரப்பு 

கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப்போட்டி இன்று  இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பாகும் நிலையில், ஜியோ ஹாட் ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ வாடிக்கையாளர்கள் அவர்களின் எண்களுக்கு குறைந்தபட்ச தொகையான ரூ.299 ரீசார்ஜ் செய்தால் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஐ இலவசமாக பார்க்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு அனைவருக்கும் இலவச சேவை வழங்கப்பட்ட நிலையில், தற்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow