Lubber Pandhu Box Office : 3 நாட்களில் மெகா வசூல்... லப்பர் பந்து படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!

Lubber Pandhu Box Office Collection : ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள லப்பர் பந்து படம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளது. முதல் மூன்று நாட்களில் லப்பர் பந்து படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து வெளியான தகவல்களை பார்க்கலாம்.

Sep 23, 2024 - 10:19
Sep 23, 2024 - 16:06
 0
Lubber Pandhu Box Office : 3 நாட்களில் மெகா வசூல்... லப்பர் பந்து படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!
லப்பர் பந்து பாக்ஸ் ஆபிஸ் 3வது நாள் கலெக்‌ஷன்

Lubber Pandhu Box Office Collection : கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (செப்.20) தமிழில் மொத்தம் 6 படங்கள் வெளியாகின. இதில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள லப்பர் பந்து சூப்பர் ஹிட் அடித்துள்ளது. தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாணும் அட்டகத்தி தினேஷும் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். மினிமம் பட்ஜெட்டில் உருவான இந்தப் பட ஹரிஷ் கல்யாணுக்கு மேலும் ஒரு சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து பக்கா கமர்சியல் மூவியாக உருவாகியுள்ளது லப்பர் பந்து. 

உள்ளூர் கிரிக்கெட் வீரர்களான ஹரிஷ் கல்யாணுக்கும் அட்டகத்தி தினேஷுக்கும், கிரிக்கெட் போட்டியின் போது மோதல் ஏற்படுகிறது. இரண்டு தலைமுறையைச் சேர்ந்த அவர்களுக்குள் ஏற்படும் இந்த ஈகோ பிரச்சினை தான் கதையின் மையக்கரு. இருப்பினும் கிரிக்கெட் பிளஸ் ஈகோவை சேர்த்து பக்கா கமர்சியலாக வந்துள்ளது லப்பர் பந்து(Lubber Pandhu). அதேபோல், படத்தின் கிளைமேக்ஸில் வரும் எதிர்பாராத ட்விஸ்ட்டும் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக லப்பர் பந்து படத்தின் ஒவ்வொரு சீனும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது. 

ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் தங்களது கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளனர். இவர்களுடன் பால சாரவணனின் காமெடியும் ஒர்க்அவுட் ஆக, மற்ற கேரக்டர்களும் நன்றாகவே நடித்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டியிருந்தனர். அதேபோல், சிவகார்த்திகேயன், இயக்குநர் மாரி செல்வராஜ், வெற்றிமாறன், பா ரஞ்சித் உள்ளிட்ட திரை பிரபலங்களும் லப்பர் பந்து(Lbber Pandhu Movie) படத்தை பாராட்டியதோடு, படக்குழுவினரையும் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். பார்க்கிங் படத்தைத் தொடர்ந்து லப்பர் பந்து மூலம் பேக் டூ பேக் ஹிட் கொடுத்துள்ளார் ஹரிஷ் கல்யாண். 

லப்பர் பந்துக்கு(Lubber Pandhu) கிடைத்துள்ள பாசிட்டிவான விமர்சனம் காரணமாக. தமிழகத்தில் இப்படத்திற்கான ஸ்க்ரீன்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. அதன்படி லப்பர் பந்து திரைப்படம் முதல் நாளில் 75 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை வசூலித்தாக சொல்லப்பட்டது. ஆனால் இரண்டாவது நாளில் 1.75 கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்த இத்திரைப்படம், மூன்றாவது நாளில் 2 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. அதன்படி லப்பர் பந்து படத்தின்(Lubber Pandhu Box Office Collection) முதல் மூன்று நாள் கலெக்ஷன் 5 கோடி ரூபாய் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

வெங்கட் பிரபுவின் சென்னை 28 படத்துக்குப் பின்னர், கிரிக்கெட் ஜானரில் பக்கா கமர்சியல் மூவி லப்பர் பந்து(Lubber Pandhu) என ரசிகர்கள் என பாராட்டி வருகின்றனர். அதேபோல், இந்தப் படம் முழுக்க கேப்டன் விஜயகாந்தின் ரெஃபரன்ஸ் அதிகம் இருப்பதால், அனைத்துத் தரப்பு ரசிகர்களிடமும் லப்பர் பந்து படத்துக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow