Thalapathy 69: தளபதி 69 ‘One Last Song’... விஜய்யின் மரண மாஸ்... ஸ்பாட்டில் என்ட்ரியான அனிருத்!
விஜய்யின் கடைசிப் படமான தளபதி 69 ஷூட்டிங் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், முதலில் பாடலை படமாக்கி வருகிறார் ஹெச் வினோத். இந்தப் பாடல் குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை: H வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 69 படப்பிடிப்பு, கடந்த வாரம் 4ம் தேதி பூஜையுடன் தொடங்கியது. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, இயக்குநர் H வினோத், தயாரிப்பாளர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அதேநாளில் தவெக மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் விழாவும் நடைபெற்று முடிந்தது. ஆனால், பந்தக்கால் நடும் விழாவில் கலந்துகொள்ளாத விஜய், தளபதி 69 பூஜையில் ஆஜராகியிருந்தார். இந்நிலையில் தளபதி 69 பூஜை முடிந்த மறுநாளே, படப்பிடிப்பை தொடங்கினார் இயக்குநர் H வினோத்.
அதன்படி சென்னையில் தொடங்கிய தளபதி 69 முதல் ஷெட்யூலில், பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறதாம். பூஜைக்கு முன்னரே தளபதி 69 ஃபர்ஸ்ட் சிங்கிளை ரெடி செய்துவிட்டாராம் அனிருத், அது இன்னொரு ‘வாத்தி கம்மிங்’ பாடலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ’One Last Song’ என்ற டைட்டிலில் உருவாகும் இப்பாடலை விஜய் பாடியுள்ளதாகவும், அசல் கோலார் பாடல் வரிகளை எழுதியுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லியோ படத்தின் நான் ரெடி பாடலை அசல் கோலார் எழுதியிருந்தார், அதனைத் தொடர்ந்து தற்போது விஜய், அனிருத், அசல் கோலார் கூட்டணி தளபதி 69 படத்திலும் இணைந்துள்ளது.
500 டான்ஸர்களுடன் பிரம்மாண்டமாக உருவாகும் தளபதி 69 ஃபர்ஸ்ட் சிங்கிள், விஜய் ரசிகர்கள் தரமான ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது. விஜய்யின் கடைசிப் படம் இது என்பதால், சும்மா தர லோக்கலில் இறங்கி செய்துள்ளாராம் அனிருத். இந்நிலையில், இப்பாடலின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அனிருத் நேரில் சென்று விசிட் அடித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட அனிருத்தின் போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தளபதி 69 ஃபர்ஸ்ட் சிங்கிள் ஷூட்டிங் முடிந்ததும், தவெக மாநாடு வேலைகளில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய். அதன்பின்னர் மீண்டும் நவம்பரில் தான் தளபதி 69 படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.
நவம்பரில் மீண்டும் தொடங்கும் தளபதி 69 ஷூட்டிங், அடுத்தடுத்து வேகமாக நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு, அரசியலில் தீவிரமாக களமிறங்கவுள்ளாராம் விஜய். இந்நிலையில், தளபதி 69 படத்தின் டைட்டில் பொங்கல் ஸ்பெஷலாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விஜய்யின் கோட் திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த மாதம் 5ம் தேதி ரிலீஸான கோட், பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






