“சூர்யா 44 கேங்ஸ்டர் மூவி கிடையாது.. ரஜினி சார் அப்படி கேள்வி கேட்டார்..” கார்த்திக் சுப்புராஜ் ஓபன்

சூர்யாவின் 44வது படத்தை இயக்கியுள்ள கார்த்திக் சுப்புராஜ், அப்படத்தின் கதை குறித்தும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றியும் மனம் திறந்துள்ளார்.

Oct 18, 2024 - 20:31
 0
“சூர்யா 44 கேங்ஸ்டர் மூவி கிடையாது.. ரஜினி சார் அப்படி கேள்வி கேட்டார்..” கார்த்திக் சுப்புராஜ் ஓபன்
ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ்

சென்னை: சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘சூர்யா 44.’ சில மாதங்களுக்கு முன் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங், சமீபத்தில் நிறைவுபெற்றது. இதனையடுத்து சூர்யா 44 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. சூர்யாவின் 44வது படமான இது, ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், இது ஆக்ஷன் ஜானர் மூவி கிடையாது என அப்டேட் கொடுத்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். கடைசியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம், மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. 

இதனையடுத்து தளபதி விஜய்யின் கடைசி படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், திடீரென சூர்யாவுடன் இணைந்த அவர், தற்போது ‘சூர்யா 44’ படத்தின் மொத்த படப்பிடிப்பையும் அசுர வேகத்தில் முடித்துவிட்டார். சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷலாக ‘சூர்யா 44’ படத்தின் ஸ்பெஷல் ப்ரோமோவை வெளியிட்டிருந்தார் கார்த்திக் சுப்புராஜ். அதில், சூர்யவின் கெட்டப், லுக், ஆக்டிங் என அனைத்துமே தரமாக இருந்தன. அதனைப் பார்த்த ரசிகர்கள் ‘சூர்யா 44’ கேங்ஸ்டர் ஜானர் மூவியாக இருக்கும் என கூறி வந்தனர். 

ஆனால், அந்த ப்ரோமோவை வைத்து சூர்யா 44 கேங்ஸ்ட மூவி என ரசிகர்கள் முடிவு செய்துவிட வேண்டாம். இது காதலை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள பக்கா ரொமான்ஸ் மூவி எனக் கூறியுள்ளார். சூர்யா 44 படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார். இதனால் சூர்யா – பூஜா ஹெக்டே காம்போவில் ரொமாண்டிக்கலாக ஒரு லவ் ஸ்டோரி பார்க்க ரசிகர்கள் ரெடியாகிவிட்டனர். இந்நிலையில் இத்திரைப்படம் அடுத்தாண்டு சம்மர் ஸ்பெஷலாக வெளியாகும் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். ஷூட்டிங் முடிந்துவிட்டாலும், போஸ்ட் புரொடக்ஷன், பின்னணி இசையமைப்பு ஆகியவை இனிமேல் தொடங்கவுள்ளன.

சூர்யா 44 அப்டேட்டுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். ரஜினியின் பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், அதன் ஷூட்டிங் தொடங்கும் முன்னர், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மகான் படங்களின் கதையும் கூறியுள்ளார். ஆனால், முழு ஸ்க்ரிப்ட்டும் சொல்லாமல், அதன் அவுட் லைன் மட்டும் சொன்னதால், ரஜினி அந்த கதைகளை ரிஜெக்ட் செய்துவிட்டாராம். ஆனால், மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்களை பார்த்துவிட்டு ரஜினி சார் நேரில் அழைத்து பாராட்டினார்.

அப்போது “இந்த கதைகளை ஏன் எனக்கு முதலில் சொல்லவில்லை என உரிமையுடன் கேட்டார். நான் கதையை ஏற்கனவே சொன்னேன், ஆனால், அப்போ அது முழுவதும் ரெடியாகாமல் ஐடியாவாக மட்டுமே இருந்தது” என கூறினாராம். ஒருவேளை கார்த்திக் சுப்புராஜ் முழு கதையும் கூறியிருந்தால், மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்களில் சூப்பர் ஸ்டாரே நடித்திருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow