This Week OTT Release: இங்க நான் தான் கிங்கு முதல் Civil War வரை... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்!

இந்த வாரம் என்னென்ன படங்கள், வெப் சீரிஸ்கள் ஓடிடியில் வெளியாகின்றன என்பதை இங்கே பார்க்கலாம்.

Jun 28, 2024 - 23:31
Jul 2, 2024 - 00:08
 0
This Week OTT Release: இங்க நான் தான் கிங்கு முதல் Civil War வரை... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்!
This Week OTT Release Movies in Tamil

சென்னை: ஓடிடி ரசிகர்களுக்கு இந்த வாரம் தமிழில் ஒரேயொரு திரைப்படம் மட்டுமே வெளியாகியுள்ளது. அதன்படி, சந்தானம் நடித்துள்ள இங்க நான் தான் கிங்கு அமேசான் ப்ரைம் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. ஆனந்த நாராயணன் இயக்கத்தில் சந்தானம், தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம், கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. சந்தானம் ஸ்டைலில் காமெடி ஜானர் மூவியாக ரிலீஸான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இந்நிலையில், இங்க நான் தான் கிங்கு படத்தை இன்று முதல் அமேசான் ப்ரைமில் பார்க்கலாம்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த குருவாயூர் அம்பலநடையில் திரைப்படமும் இந்த வாரம் ஓடிடிக்கு வந்துவிட்டது. அந்தாக்ஷ்ரி, ஜெய ஜெய ஜெய ஜெய ஹே போன்ற படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குநர் விபின் தாஸ். அவர் அடுத்து இயக்கியுள்ள குருவாயூர் அம்பலநடையில் படம் கடந்த மாதம் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிருத்விராஜ், பாசில் ஜோசப், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள குருவாயூர் அம்பலநடையில், காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. நேற்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான இப்படத்துக்கு ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வாரம் குடும்பத்துடன் ஓடிடியில் ஒரு படம் பார்க்க நினைக்கும் ரசிகர்கள், குருவாயூர் அம்பலநடையில் கண்டு ரசிக்கலாம்.

தெலுங்கில் லவ் மெளலி திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்திலும், பஜே வாயு வேகம் (Bhaje Vaayu Vegam) நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் வெளியாகியுள்ளன. இந்தியில் ரவுது கா ராஸ் (Rautu Ka Raaz) ஜீ5 ஓடிடியில் இந்த வாரம் முதல் ஸ்ட்ரீமிங் ஆகிவருகிறது. அதேபோல், சர்மாஜி கி பேட்டி (Sharmajee Ki Beti) என்ற இந்தி திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. இதனுடன் ஆங்கிலத்தில் சிவில் வார் திரைப்படம், Ransomed என்ற கொரியன் மூவி இரண்டும் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளன. My Lady Jane சீசன் 1 வெப் சீரிஸும் இந்த வாரத்திலிருந்து அமேசான் ப்ரைம் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது.   

நெட்பிளிக்ஸில் A Family Affair, The Whirlwind (கொரியன்), Drawing Closer, The Corpse Washer ஆகிய படங்களும், Supacell சீசன் 1, That 90s Show சீசன் 2 என்ற வெப் சீரிஸ்களும் இந்த வாரம் வெளியாகியுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow