GOAT Ticket Booking: விஜய் ரசிகர்கள் ரெடியா... கோட் டிக்கெட் புக்கிங் எப்போ ஆரம்பம்ன்னு தெரியுமா..?

விஜய் நடித்துள்ள கோட் செப்.5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் எப்போது தொடங்கும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Aug 28, 2024 - 23:41
Aug 29, 2024 - 15:50
 0
GOAT Ticket Booking: விஜய் ரசிகர்கள் ரெடியா... கோட் டிக்கெட் புக்கிங் எப்போ ஆரம்பம்ன்னு தெரியுமா..?
விரைவில் கோட் டிக்கெட் புக்கிங்

சென்னை: விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள கோட் படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட மேலும் பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். கோட் படத்தின் ட்ரைலர் உட்பட 3 பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இதன் தொடர்ச்சியாக வரும் 31ம் தேதி யுவன் பிறந்தநாளில் கோட் 4வது சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கோட் படத்தின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் எப்போது ஆரம்பம் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழ்நாட்டில் கோட் படத்தின் FDFS காலை 9 மணிக்கு திரையிடப்படும் என சொல்லப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் ரொம்பவே ஏமாற்றத்தில் உள்ளனர். அதேநேரம் கேரளா, பெங்களூர் போன்ற வெளி மாநிலங்களில் கோட் FDFS அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படுவது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளிலும் அதிகாலை 4 மணிக்கு கோட் ரிலீஸாகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கோட் படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் வரும் வெள்ளிக் கிழமை (ஆக.30) தொடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கோட் டிக்கெட் ரிசர்வேஷன் செய்ய விஜய் ரசிகர்கள் ரெடியாக காத்திருக்கின்றனர்.

செப்டம்பர் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி என்பதால், தொடர் விடுமுறை இருக்கும். எனவே செப்.5 முதல் 9ம் தேதி வரை கோட் படத்தின் டிக்கெட் புக்கிங் செம பிஸியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் கோட் மட்டும் சிங்கிளாக களமிறங்கவுள்ளதால் பாக்ஸ் ஆபிஸிலும் தரமான ஓபனிங் கிடைக்கும் திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கோட் படத்தை இந்தியா முழுவதும் கிராண்ட் ரிலீஸ் செய்ய அடுத்தடுத்த முயற்சிகளில் இறங்கியுள்ளார். அதன்படி தற்போது மும்பையில் உள்ள அவர், இந்தியளவிலான மல்டிபிளக்ஸ் அசோஷியன் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

மேலும் படிக்க - வாழை வரலாற்று மோசடியா..? 

அதன்மூலம், வடமாநிலங்கள் முழுவதும் பிவிஆர், ஐநாக்ஸ் ஸ்க்ரீன்களில் கோட் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் செய்து வருகிறாராம் அர்ச்சனா கல்பாத்தி. இது மட்டும் கன்ஃபார்ம் ஆகிவிட்டால், கோட் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதனிடையே தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் கோட் படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கி சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்நிலையில், கோட் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியாக, சென்னையில் பிரஸ்மீட் நடைபெறவுள்ளது. 

நாளை (ஆக.29) நடைபெறும் இந்நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கட் பிரபு, பிரசாந்த், பிரபுதேவா, மோகன் ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், விஜய்யும் கலந்துகொள்வாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். கோட் இசை வெளியீட்டு விழாவுக்கு விஜய் தான் க்ரீன் சிக்னல் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இசை வெளியீட்டு விழாவில் அரசியல் குறித்து எதாவது பேசினால், அது கோட் ரிலீஸுக்கு சிக்கலாகிவிடும். இதனால் கோட் இசை வெளியீட்டு விழா வேண்டாம் என மறுத்துவிட்ட விஜய், பிரஸ்மீட்டில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow