Meiyazhagan: “மெய்யழகன் படத்த விமர்சிக்க வேண்டாம்... வசூல் பத்தி கவலைபடாதீங்க..” சூர்யா சொன்ன சீக்ரெட்!

கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் 27ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து சூர்யா பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

Sep 22, 2024 - 20:51
 0
Meiyazhagan: “மெய்யழகன் படத்த விமர்சிக்க வேண்டாம்... வசூல் பத்தி கவலைபடாதீங்க..” சூர்யா சொன்ன சீக்ரெட்!
மெய்யழகன் இசை வெளியீட்டு விழா

சென்னை: விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் மூலம் பிரபலமானவர் இயக்குநர் பிரேம்குமார். 96-க்குப் பின்னர் பிரேம்குமார் இயக்கியுள்ள மெய்யழகன் படத்துக்கும் ரசிகர்களிடம் பெரியளவில் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. சூர்யா, ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், கார்த்தியும் அரவிந்த் சாமியும் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், ஸ்வாதி கொண்டே, இளவரசு, கருணாகரன் ஆகியோரும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர். அதேபோல், மெய்யழகன் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். 

மெய்யழகன் டீசரும் பாடல்களும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் ட்ரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இதனிடையே மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், 96 படம் பார்த்ததில் இருந்தே இயக்குநர் பிரேம்குமார் மீது மரியாதை இருந்தது, ஆனால், மெய்யழகன் கதையை என்னிடம் முதலில் சொன்னது தசெ ஞானவேல் தான். அவர் மூலமாக தான் இந்தப் படத்தை என்னால் தயாரிக்க முடிந்தது, அதற்காக ஞானவேலுக்கு நன்றி கூறினார்.

அதேபோல், மெய்யழகன் ஃபைனல் வெர்ஷன் பார்த்து கண் கலங்கிவிட்டதாகவும், அப்படியொரு குடும்பப் பின்னணி கொண்ட படமாக வந்துள்ளதாகவும் பாராட்டினார். இந்தப் படம் கண்டிப்பாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் எனக் கூறிய சூர்யா, மெய்யழகனை கொண்டாடுங்கள், அதை விமர்சிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டாம் என்றார். முக்கியமாக மெய்யழகன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றியெல்லாம் ரசிகர்களாகிய உங்களுக்கு குழப்பம் வேண்டாம், அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என சொன்னதும் அரங்கமே அதிர்ந்தது.

அவரைத் தொடர்ந்து பேசிய அரவிந்த் சாமி, மெய்யழகன் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். நான் முழுக்க முழுக்க தோட்டத்தில் வளர்ந்தவன், அதனால் எனக்கு கிராமங்களின் சூழல் எப்படி இருக்கும் என நன்றாக தெரியும். அந்த அனுபவம் மெய்யழகன் படம் மூலம் மீண்டும் கிடைத்ததில் மகிழ்ச்சி என்றார். அதேபோல், நடிகர் கார்த்தி பேசிய போது, சின்ன வயதில் எனக்கு சொந்த ஊர் வரும் போது அப்படியொரு மகிழ்ச்சி இருக்கும். அப்படி வரும்போது இங்கே எனக்காக பெரிய சொந்தமே இருந்தது, அவர்களுக்காக எடுத்தப் படம் தான் மெய்யழகன் என நெகிழ்ச்சியாகக் கூறினார். 

மெய்யழகன் கதையை புத்தகத்தில் படிக்கும் போதே பல இடங்களில் அழுதுவிட்டேன். வழக்கமாக ஆக்ஷன் படங்களில் நடிப்பதால், ஒரு மாறுதலுக்காக மெய்யழகனில் கமிட்டானேன். நமக்கு தைரியம் வேண்டும் என்றால், அதுக்கு உறவுகள் மிக முக்கியம். இப்படியொரு படம் கொடுத்த இயக்குநர் பிரேம்குமாருக்கு நன்றி. இவரை 96 படம் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதிக்கும் நன்றி தெரிவித்தார். முக்கியமாக இந்தப் படத்தில் ““ஃபைட் வேணுமா ஃபைட் கிடையாது, லவ் வேணுமா லவ் கிடையாது, சாங் வேணுமா சாங் கிடையாது” என வாரிசு ஆடியோ லான்ச் ஸ்டைலில் கார்த்தி பேசியதும் ரசிகர்களுக்கு செம வைப் கொடுத்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow