மதுவிலக்கு மாநாடு.. பாராட்ட ஆளில்லை.. திருமாவளவன் வேதனை!

கூட்டணியில் இருந்து கொண்டு மதுவிலக்கு மாநாட்டை நடத்த இருக்கிறாரே என பாராட்ட ஆளில்லை என விசிக தலைவர் திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Sep 22, 2024 - 20:44
 0
மதுவிலக்கு மாநாடு.. பாராட்ட ஆளில்லை.. திருமாவளவன் வேதனை!
மதுவிலக்கு மாநாடு.. பாராட்ட ஆளில்லை.. திருமாவளவன் வேதனை!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 69 பேர் பலியானார்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த போது மதுபான கடைகளை அரசு மூட வேண்டும், சாராய கடைகளை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று அங்குள்ள கோரிக்கை வைத்தனர். ஆகவே தான் மதுவிலக்கு கோரி மாநாட்டை விசிக நடத்தவுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். மனித வளத்தை பாதிக்க கூடிய மது விற்பனையை அரசே செய்வது தேசத்திற்கு விரோதமான செயல். தேர்தல் அறிக்கையில் கூறிய மதுவிலக்கு கொள்கை திட்டத்தை திமுக அரசு உயிர்பிக்க வேண்டும்.மதுவை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவும் வரலாம் எல்லாம் கட்சிகளும் வரலாம்  இந்த நிலைப்பாடை தேர்தல் அரசியலோடு ஒப்பிட்டு பார்க்க கூடாது என்றும் கூறியிருந்தார். இந்த அழைப்பு ஊடகங்களில் பேசு பொருளானது. திருமாவளவன்  வேறு கூட்டணிக்கு மாறப்போகிறாரா என்ற கேள்வியும் எழுந்தது. தேர்தல் அரசியல் மற்றும் கூட்டணி அரசியலோடு மது ஒழிப்பு மாநாட்டினை முடிச்சி போட வேண்டாம் என்று விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் கூட்டணியில் இருந்து கொண்டு இப்படி பேசுகிறாரே என கூறுகிறார்கள், கூட்டணியில் இருந்து கொண்டு மதுவிலக்கு மாநாட்டை நடத்த இருக்கிறாரே என பாராட்ட ஆளில்லை என விசிக தலைவர் திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மதுரை மாவட்டம் நடத்தும் மீலாது விழா மற்றும் சமய நல்லிணக்க விழா மதுரை கேகே.நகர் பகுதியில் உள்ள வக்ஃப் வாரிய கல்லூரியில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து மத போதகர்கள் பங்கேற்றனர். முன்னதாக சிறப்பு துவா செய்து வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியில் பேசிய அவர், “மதுரையில் இருந்து தான் எனது அரசியல் வாழ்க்கை தொடங்கியது. இஸ்லாமிய சகோதரர்களுடன் இணைந்து தான் சமூக பணி, அரசியல் பணி செய்து வருகிறேன். நான் இஸ்லாமியர்களுடன் சேர்ந்து பயணிக்க காரணம், இந்த வாய்ப்பை ஏற்படுத்தி இருப்பது அவர்களிடம் மேலோங்கி இருப்பது மனிதநேயம் தான். 

மேலும் படிக்க: வரி தொடர்பாக என்னிடம் பேச வேண்டாம்.... நிர்மலா சீதாராமன் பகீர்!

இஸ்லாமிய சமூகத்தின் மீது இந்த மண்ணில் வெறுப்பு அரசியல் நடந்து வருகிறது. மத்திய அரசு எதிர்கட்சிகளை வெளியேற்றி விட்டு புதிய சட்டங்களை நிறைவேற்றுவார்கள்.  ஆனால், காலம் அவர்களுக்கு ஒரு படிப்பினையை உருவாக்கி இன்றைக்கு எதிர்க்கட்சிகள் வலுவாக உள்ளது. கூட்டணியில் இருந்து கொண்டு இப்படி பேசுகிறாரே என கூறுகிறார்கள். ஆனால் கூட்டணியில் இருந்து கொண்டு இப்படி நடந்துகொள்கிறாரே என பாராட்ட ஆளில்லை. தேசம் முழுவதும் மதுவிலக்கு கொண்டு வரவேண்டும். மதம் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க தேசியம் சார்ந்த பார்வை தேவை, சாதி சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க தேசியம் சார்ந்த பார்வை தேவை” என எழுச்சிமிகப் பேசினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow