சினிமா

தீபிகா - ரன்வீர் வீட்டில் குட் நியூஸ்.. என்ன குழந்தை தெரியுமா?

நடிகை தீபிகா – ரன்வீர் சிங் இணையருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் இணையத்தை வாழ்த்து மழையால் நிரப்பி வருகின்றனர். 

தீபிகா - ரன்வீர் வீட்டில் குட் நியூஸ்.. என்ன குழந்தை தெரியுமா?
Deepika padukone

பாலிவுட்டின் டாப் ஜோடி என்றால் அதில் தீப்வீர் என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் ஜோடி தான். அந்தளவிற்கு ஒரு Perfect Coupleஆக இருந்துவரும் இவர்கள் இருவர் குறித்தும் அவ்வப்போது Controvercies வந்தாலும், ஒருவருக்கொருவரை விட்டுக் கொடுத்ததில்லை என்றே சொல்லவேண்டும். காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் இருவரும் கலந்துக் கொண்டபோது தீபிகா கூறிய வார்த்தைகளை பாலிவுட் ரசிகர்கள் அதிகளவில் ட்ரோல் செய்ததோடு, ரன்வீர் சிங்கிற்கு தீபிகா தகுதியானவர் அல்ல என்ற கருத்துகளையும் முன்வைத்தனர். ஆனால், தீபிகாவோ இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தார். பாலிவுட்டின் லேடி ஜேம்ஸ்பாண்ட் என்றளவிற்கு தனக்கென தனி அடையாளத்தைக் கொண்டதோடு, தன் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகுந்த அக்கறைக் கொண்டிருந்தார் தீபிகா படுகோன். 

அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் வெளியான அந்த சமயத்தில் தான் தீபிகா படுகோன் கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தீபிகா கர்ப்பமாக இருந்ததையும் மிகக் கடுமையாக சிலர் ட்ரோல் செய்தனர். அவர் உண்மையிலேயே கர்ப்பமாக அல்ல, அவர் கர்ப்பமாக இருப்பதுபோல் நடிக்கிறார்... அவரது வயிறு பெரிதாகவில்லை.. அப்படியே பெரிதானாலும் அது Duplicate pregnancy bag என்றெல்லாம் கடுமையாக ட்ரோல் செய்தனர். இதனால் மனமுடைந்துபோன தீபிகா அதிகளவில் வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்தார். மக்களவைத் தேர்தலில் வாக்கு செலுத்தும்போது, கல்கி பட ப்ரோமோஷன்கள், அம்பானி வீட்டு கல்யாணம் என முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்துக் கொண்டார். அதில் குறிப்பாக மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வந்தபோது, அவரது வயிறு கர்ப்பமாக இருப்பது போன்று காட்சியளிக்கவில்லை என்றும், அவர் நாடகமாடி வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற இருக்கிறார் என்றெல்லாம் பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால், அம்பானி வீட்டு கல்யாணத்தில் முழுமாத கர்ப்பிணியாக அழகான சிவப்பு உடையில் காட்சியளித்த தீபிகாவின் புகைப்படங்கள் நாடு முழுவதும் வைரலாகியதோடு, தீபிகாவிற்கு திருஷ்டி சுத்திப்போடும் ஐஸ்வர்யா ராயின் வீடியோவும் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டது. 

இந்த மாத இறுதியில் அவருக்கு குழந்தை பிறக்கும் என்று மருத்துவமனையில் தேதி குறிப்பிட்ட நிலையில், திடீரென வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக தீபிகா படுகோன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில், தீபிகாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த செய்தி வெளியானதில் இருந்து, பெற்றோர்களாக இந்த அற்புதமான புதிய பயணத்தை தொடங்கும் தீபிகா மற்றும் ரன்வீருக்கு நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் தங்கள் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

குழந்தை பெற்ற பிறகு தீபிகா – ரன்வீர் – அவர்களது குழந்தை மூவரும் புதுவீட்டிற்கு குடிப்பெயர உள்ளதாகவும், ஷாருக்கானின் வீட்டு அருகில் உள்ள அப்பார்ட்மெண்ட்டில் 16 முதல் 19 மாடியில் உள்ள வீடுகளை அவர்கள் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.