சினிமா

"எமகாதகி" திரைப்படம் வெற்றிக்கு படக்குழுவினர் நன்றி அறிவிப்பு விழா..!

நைசாத் மிடியா ஒர்க்ஸ் சார்பாக ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கிராம பின்னணியில், முழுக்க முழுக்க மிக வித்தியாசமான ஹாரர் திரில்லராக , கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் "எமகாதகி". வித்தியாசமான களத்தில், ஒரு தரமான படைப்பாக பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைக் குவித்தது. 


எமகாதகி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர், பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.  நைசாத் மிடியா ஒர்க்ஸ் சார்பாக ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கணபதி ரெட்டி இணைந்து தயாரித்துள்ள “எமகாதகி” திரைப்படத்தை, யெஷ்வா பிக்சர்ஸ் உலகம் முழுவதும்  வெளியிட்டுள்ளது. உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்யா  மற்றும் மிஸ்டர்.பிரக்னெண்ட் படப்புகழ்  ரூபா கொடவாயூர்  முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை, அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் இயக்கியுள்ளார். 

“எமகாதகி”  கிராமப் பின்னணியில் அமானுஷ்ய மர்ம திரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்தில் அமரன் புகழ் நடிகை கீதா கைலாசம் மற்றும் பிளாக்‌ஷீப் புகழ் நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம், மார்ச் 7 ஆம் தேதி  வெளியான “எமகாதகி” திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.  

Read More:  IQAir-ன் உலக காற்று தர அறிக்கை.. இந்தியாவிற்கு 5-வது இடம்...!

தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசராவ் ஜலகம்;

இப்படத்திற்கு பெரும் ஆதரவு அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. நான் 20 வருடங்களாகத் தமிழ் நாட்டில் வேலை பார்த்து வருகிறேன். இது கலாச்சாரத்தைப் போற்றும் நிலம். இந்த தமிழ் நாட்டிற்கு ஏதாவது பணியாற்ற வேண்டும் என்பது என் ஆசையாக இருந்தது. இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் இந்தக்கதையைச் சொன்ன போது, அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தை இணைந்து தயாரித்த கணபதி ரெட்டிக்கு என் நன்றி. இப்படத்திற்காக உழைத்திட்ட இயக்குநர், நடிகர்கள்,, தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. பெப்பின் ஜார்ஜ் மிகத் திறமையானவர். இப்படத்தில் அவரது திறமையை நிரூபித்துள்ளார்.  

நடிகை ஹரிதா 

பத்திரிக்கை ஊடகங்களுக்கு நன்றியும் அன்பும். இப்படம் எங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான படைப்பு. இப்பாத்திரத்தை எனக்குத் தந்த பெப்பின் ஜார்ஜுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர், எடிட்டர், சவுண்ட் டிசைன் ஆகிய அனைவருக்கும் நன்றி. இப்படத்தை உருவாக்கிய தயாரிப்பாளருக்கு நன்றி. 36 மெயின் கேரக்டர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். உடன் நடித்த, ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. எங்கள் உழைப்பைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி. 

நடிகர் சுபாஷ்

இப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. எனக்கு முழு ஆதரவு தந்த வெங்கட்டுக்கு நன்றி. ஷூட்டிங்க் ஸ்பாட்டில் பெப்பின் எனக்கு தந்த இடம் மிகப்பெரிது. அவர் இப்போது வேறோரு படத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறார். அவர் எனக்குத் தந்து வரும் ஆதரவுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங்க்கிற்கு நன்றி. உடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நன்றி. 

நடிகர் நரேந்திர பிரசாத் 

மிகவும் மகிழ்ச்சியாகவும் பதட்டமாகவும் இருக்கிறது. எமகாதகி மனதுக்கு மிக நெருக்கமான படம், இப்படத்திற்கு அன்பைத் தந்த அனைவருக்கும் நன்றி. இயக்குநர், தயாரிப்பாளர், மற்றும் இப்படத்தின் குழுவினர் அனைவருக்கும் நன்றி. என்னை அடையாளப் படுத்திய பிளாக் ஷிப்பிற்கு நன்றி. இனி நல்ல படங்கள் செய்வேன் என நம்புகிறேன்.

தயாரிப்பாளர் கணபதி ரெட்டி 

எனக்குத் தமிழ் தெரியாது மன்னிக்கவும், எனக்குத் தமிழ்த் திரையுலகம் மிகவும் பிடிக்கும் இங்குள்ள கலைஞர்கள் திரைப்படங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார்கள். பெப்பின் மிகத் திறமையானவர். இப்படத்தை மிக அட்டகாசமாக எடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர் சுஜித் எங்கள் பட்ஜெட்டுக்குள் மிக அட்டகாசமாகப் படத்தை எடுத்துத் தந்தார். 

இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் 

எமகாதகி எங்களுக்கு மிகவும் முக்கியமான படைப்பு.  இப்படம் முழுமையாக வந்ததற்கு இம்மேடையில் இருப்பவர்கள் தான் காரணம், அதே போல் இப்படம் மக்களிடம்  சென்று சேர்ந்ததற்குப் பத்திரிக்கையாளர்களாகிய நீங்கள் தான் காரணம். உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள். எடிட்டிங்கில் ஸ்ரீஜித் சாரங் பல ஆச்சரியங்களைச் செய்து காட்டினார். இசையமைப்பாளர் ஜெசின் மிக அட்டகாசமாகச் செய்துள்ளார். சவுண்டில் மிரட்டிய சச்சின், அரவிந்த் இருவருக்கும் நன்றி.  உங்களுக்குத் திரையிட்டவுடனே இப்படத்தின் தலையெழுத்து மாறிவிட்டது. நீங்கள் தந்த மிகப்பெரிய ஆதரவுக்கு நன்றி. நல்ல படங்களைத் தொடர்ந்து தருவேன் நன்றி. 

தயாரிப்பாளர் ராகுல் வெங்கட் 

எங்கள் படத்தை மிகப்பெரிய படமாக மாற்றித் தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. இப்படத்தின் கதையை பெப்பின் சொல்லி 3 வருடம் ஆகிவிட்டது. ஆனால் இப்படத்தை நீங்கள் பார்த்த பிறகு தான் மிகப்பெரிய நிம்மதி வந்தது. நீங்கள் தந்த பாராட்டில் தான் மக்களிடம் இப்படம் சென்று சேர்ந்துள்ளது. திரையரங்குகள் அதிகரிக்கக் காரணம் நீங்கள் தான் அனைவருக்கும் என் நன்றிகள். கீதா மேடம், ரூபா,  நரேந்திர பிரசாத் எல்லோரும் மிகப்பெரிய ஆதரவைத் தந்தனர். இன்னும் இது போல் நிறைய நல்ல படங்கள் செய்வோம் ஆதரவு தாருங்கள் நன்றி. 

ஒரு இளம் பெண்ணின் மரணத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தை மையமாக வைத்துக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. முழுப் படத்தையும் தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கியுள்ளனர் படக்குழுவினர்.   

துருவங்கள் பதினாறு, டியர் காம்ரேட், முதல் நீ முடிவும் நீ, கணம்,  படப்புகழ் சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார், அனிமல், அமரன், லியோ போன்ற பல படங்களின் சவுண்ட் டிசைனிங் நிறுவனமான Sync Cinema, ஒலி வடிவமைப்பைச் செய்துள்ளது. உயர்தர தொழில்நுட்ப தரத்தில், மிகச்சிறப்பான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.  

Read More: பாகிஸ்தானில் சுமார் 100 பேருடன் பயணிகள் ரயில் கடத்தல்.. 11 வீரர்கள் உயிரிழப்பு