பாகிஸ்தானில் சுமார் 100 பேருடன் பயணிகள் ரயில் கடத்தல்.. 11 வீரர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை தீவிரவாதிகள் கடத்திய விவகாரத்தில், தீவிரவாத அமைப்புகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். ரயிலில் 400க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில், 182 பேரை பிணைக் கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் குவெட்டாவிலிருந்து பெஷாவர் செல்லும் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை தீவிரவாதிகள் கடத்திய நிலையில், ரயிலில் இருந்த 11 ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். பலுசிஸ்தான் விடுதலை குழு என்ற தீவிரவாத இயக்கத்தினர் பாதுகாப்புப் படையினர் உட்பட ரயிலில் இருந்து 400 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் ரயில்
பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டாவிலிருந்து கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவருக்கு ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒன்பது பெட்டிகளில் 400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணம் செய்துக்கொண்டிருந்தபோது, ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read More: தொடரும் பாலியல் குற்றச்சாட்டு.. 25 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நீக்கம்..!
ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டின் போது, ரயில் தடம் புரண்டாக பயங்கரவாதி குழு தெரிவித்துள்ளது. இந்த ரயிலில், பொதுமக்களுடன் இணைந்து 140 ராணுவ வீரர்களும் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. ரயிலை மீட்கும் முயற்சியில் இராணுவம் மேற்கொண்டிருந்த போது, ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் 11 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பலுசிஸ்தான் அமைப்பு
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்த பிறகு, அது பலுசிஸ்தானை தன்னுடன் இணைத்துக்கொண்டது. பாகிஸ்தானிடம் இருந்து பலுசிஸ்தானை விடுவிக்க பிஎல்ஏ உட்பட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், இத்தகைய சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது. எண்ணெய் மற்றும் கனிம வளம் மிக்க பாகிஸ்தானின் மிகப் பெரிய மாகாணமாக பலுசிஸ்தான் உள்ளது. எனினும், இந்த மாகாணம் குறைந்த மக்கள் தொகையை கொண்டுள்ளது. பாகிஸ்தான் மத்திய அரசு, பலுசிஸ்தானுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும், தங்கள் மாகாணம் சுரண்டப்படுவதாகவும் பலுசிஸ்தான் அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Read More: IQAir-ன் உலக காற்று தர அறிக்கை.. இந்தியாவிற்கு 5-வது இடம்...!
What's Your Reaction?






