K U M U D A M   N E W S

கடத்தல்

மகனை மீட்டு தரக்கோரி பெண் புகார்...ஆக்ஷனில் இறங்கிய சென்னை போலீஸ்

கணவன்-மனைவி இடையிலான தகராறு குறித்து முறையான விசாரணை நடத்துவதற்காக திருமங்கலம் காவல் நிலையத்தின் குறிப்பிட்டுள்ள மனுவை சென்னை பெருநகர காவல்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கு மாற்றப்பட்டுள்ளது.

தி.மலையில் ஏரி மண் கடத்தி பதுக்கிய பாமக மா.செ... எச்சரிக்கை விடுத்த வட்டாட்சியர்

தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததின் பெயரில் அங்கிருந்து பாமக மாவட்ட செயலாளர் செய்வதறியாது சென்று விட்டார்.

பள்ளி மாணவிகளை சீரழித்த கொடூர தம்பதி... 7 ஆண்டுகள் தலைமறைவு... செக் வைத்த சிபிசிஐடி!

பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவன்- மனைவியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

தொழிலதிபரின் 10 வயது மகனை கடத்தல்.. கார் ஓட்டுனர் கைது..!

கோவையில் தொழிலதிபரின் 10 வயது மகனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கடத்தப்பட்ட சிறுவனை காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு மீட்டனர்.

Youtube பார்த்து தங்கக் கடத்தலா? பகீர் வாக்குமூலம் கொடுத்த நடிகை

தங்க கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள பிரபல நடிகை போலீஸ் விசாரணையில் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் ரயில் சிறைப்பிடிப்பு விவகாரம்.. கேடயமாக்கப்பட்ட பயணிகள்.. முழு விவரம்!

பாகிஸ்தான் ரயில் சிறைப்பிடிப்பு சம்பவத்தில் பலுச் அமைப்பினர் 33 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடத்தப்பட்ட ரயிலில் 155 பேர் பத்திரமாக மீட்பு.. ராணுவ வீரர்கள், போலீசார் என 30 பேர் உயிரிழப்பு

கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட ரயிலில் சிக்கி கொண்ட 400 பயணிகளில் 155 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ரயிலில் பயணித்த ராணுவ வீரர்கள், போலீசார் என 30 பேர் உயிரிழந்த நிலையில், பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 27 பேர் பலியாகினர். தொடர்ந்து ரயில் உள்ள எஞ்சியோரை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாகிஸ்தானில் சுமார் 100 பேருடன் பயணிகள் ரயில் கடத்தல்.. 11 வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை தீவிரவாதிகள் கடத்திய விவகாரத்தில், தீவிரவாத அமைப்புகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். ரயிலில் 400க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில், 182 பேரை பிணைக் கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சமூக ஆர்வலர்களை தாக்கிய மணல் மாஃபியாக்கள்!

மண் கடத்தல் குறித்து சமூக வலைதளங்களில் தகவல் வெளியிட்ட சமூக ஆர்வலர் மீது திமுக நிர்வாகி கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, தமிழகத்தில் சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குருவியாக மாறிய 'வாகா' நடிகை உடல் முழுக்க கடத்தல் தங்கம் சிக்கிய 14.8 கிலோ தங்கம்..?

பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ், துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 14.8 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாட்சிகளை மிரட்டும் Pon Manickavel - சிபிஐ தரப்பில் பகீர் குற்றச்சாட்டு

சிலைக்கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டதாக பொன் மாணிக்கவேல் மீதான வழக்கு

ரேசன் அரிசியை கடத்தி வந்து அரைத்து விற்பனை செய்த பெண் கைது..!

ரேசன் அரிசியை கடத்தி வந்து அரைத்து மாவு பாக்கெட்டுகளாக விற்பனை செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைத்தனர். 

சேலத்தில் வீடு புகுந்து இளம்பெண் கடத்தல்

மாற்று சமூக இளைஞரை மணம் முடித்ததால், பெண் வீட்டார் வெறிச்செயலில் ஈடுபட்டதாக தகவல்

கோடிக்கணக்கில் லஞ்சம்... ஆதாரத்துடன் காவலர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

காவல் அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டி காவலர் வெளியிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரல்.

இலங்கைக்கு கடத்த இருந்த கள்ளத் துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்.. இருவர் கைது

சென்னையில் இருந்து இலங்கைக்கு கள்ளத் துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருள் கடத்திய இருவரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.

மெத்தபெட்டமைன் கடத்தல்; காவலருக்கு காப்பு போட்ட காவல்துறை

மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அசோக் நகர் காவலர் ஜேம்ஸ் என்பவர் சில தினங்களுக்கு முன் வடபழனி போலீசாரால் கைது செய்தனர்.

ஜாபர் சாதிக் வழக்கு.. ED தெரிவித்த பகீர் தகவல்

ஜாபர் சாதிக், உணவுப் பொருள் என்ற பெயரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தினார் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

நகை விற்பனையாளரை கடத்தி தங்கம் கொள்ளை... நடுக்காட்டில் இறக்கிவிட்ட கும்பல்

மதுரை அருகே நகை விற்பனையாளரை கடத்தி 2 கிலோ நகைகளை பறித்து சென்ற மர்ம கும்பலை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

போதைப்பொருள் கடத்தல்... சினிமாவை மிஞ்சிய ஓட்டல் அதிபர்கள்.. சிக்கியது எப்படி?

கப்பல் மூலமாக மெத் போதை பொருள் சப்ளை செய்து வந்த ஓட்டல் அதிபர்கள் இருவரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.

டீலர்கள் வைத்து போதைப்பொருள் கடத்தல்.. சகோதரர்களை அலேக்காக தூக்கிய போலீஸார்

மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை தெற்கு மண்டல தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

ரூ.2,000 கோடி ரஷ்ய முதலீடு என கூறி மோசடி.. ரெய்டில் சிக்கிய 470 சவரன் தங்கம், 400கிலோ வெள்ளி

ரஷ்ய கலாச்சார மையத்தை பயன்படுத்தி சுமார் 7,32,45,000 ரூபாய் மோசடி செய்த நபரிடம் இருந்து, 470 சவரன் தங்க நகைகள், 400கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கேசுவலாக குழந்தையை கடத்தி செல்லும் பெண்.. பதைபதைக்கும் CCTV காட்சி

சென்னை தியாகராய நகர் பகுதியில் பிறந்து 45 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தல் சம்பவம் தொடர்பக சிசிடிவி காட்சிகள் வெளியானது

தமிழகத்தை ஆடிப்போக வைத்த சீரியல் நடிகை - வெளியானது பகீர் தகவல்

சென்னை அரும்பாக்கத்தில் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குருவி ரூபத்தில் 8 பெண்கள்.. கற்பனைக்கு எட்டாத மாஸ்டர் பிளான் - அரண்டுப்போன அதிகாரிகள்

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு 3 விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான தங்கத்தை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பதுக்கி வைக்கப்பட்ட போதைப்பொருள்..! அதிரடி காட்டிய போலீசார்

முறப்பநாட்டில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேட்டமைன் மற்றும் சாரஸ் போதைப்பொருள் சிக்கியது.