தமிழ்நாடு

மணல் கடத்தலை தட்டிக்கேட்டவருக்கு மண்வெட்டியால் வெட்டு - 3 பேர் கைது

மணல் கடத்தலை தட்டி கேட்ட நில உரிமையாளரை மண்வெட்டியால் வெட்டப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணல் கடத்தலை தட்டிக்கேட்டவருக்கு மண்வெட்டியால் வெட்டு - 3 பேர் கைது
3 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த எம்.வி குப்பம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயத50). இவர் அதே பகுதியில் பால் ஆற்றங்கரை ஓரமுள்ள விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த சந்துரு என்பவர் இவரது கூட்டாளிகளுடன் இரவு நேரங்களில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்

இதனை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற செந்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட சந்துருவை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பாக மாறி சந்துரு வைத்திருந்த மண்வெட்டியால் செந்திலை முகத்தில் சரமாரியாக வெட்டி உள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மேல்பட்டி போலீசார் செந்திலை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

3 பேர் கைது

மேலும் மணல் கடத்தலை தட்டி கேட்ட செந்திலை வெட்டிய சந்துரு(வயது 22), சூர்யா(வயது 23), சக்திவேல்(வயது 21) உள்ளிட்ட 3 பேர் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மணல் கடத்தலை தட்டி கேட்ட நில உரிமையாளரை மண்வெட்டியால் வெட்டப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.