சென்னையில் போதைப்பொருள்
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மெத்தப்பெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டதாக முகமுது சொகைல், விக்னேஷ்வரன், யுவராஜ், பிரவின், பாலசந்தர் ஆகியோரை கடந்த மார்ச் மாதம் 9ஆம் தேதி கைது செய்து போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் சிறையில் அடைத்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், பெங்களூருவில் வைத்து கூட்டாளி நிகில் என்பவரை கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். மேலும் நடத்திய விசாரணையில் Christoper Oluchukwa, Samir Salah Nouraldeen, Etim Antigha, Effiong Etim, Sheu Adeleke ஆகிய நைஜிரீயா நாட்டைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சையத் அக்சன, தீபக் அந்தோனி ராஜ் ஆகியோர் கடந்த 03.04.2025 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து 4 கிராம் மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்டது. அவர்கள் அளித்த தகவலின்படி 08.04.2025ஆம் தேதி பெங்களூரூவைச் சேர்ந்த கிரன் பனிக்கர் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 1 கிராம் ஹெராயின் மற்றும் 2 கிராம் மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்டது. மேலும் நேற்று Chigemezel Nwune, Ogoegbunem, and Benard Oknkwo Juel ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடமிருந்து 2.5 கிராம் மெத்தப்பெட்டமைன் 300 கிராம் கஞ்சா கிராம் ஹெராயின், ரூபாய் 7500 மற்றும் எடை மிஷின் ஒன்று கைப்பற்றப்பட்டது.
996 வழக்குகள் பதிவு
கடந்த ஒரு மாதத்தில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட நைஜிரியா நாட்டை சார்ந்த 7 பேரும், சூடான் நாட்டை சேர்ந்த ஒருவரும் பெங்களுருவை சேர்ந்த இருவரும் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேரும், மொத்தம் 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போதைப்பொருள் கும்பலை கைது செய்தது எப்படி என்பது தொடர்பாக சென்னை காவல்துறை கிழக்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சென்னையில் போதைப்பொருள் கடத்தி வருவது, விற்பனை செய்வது உள்ளிட்ட செயல்களை தடுப்பதற்காக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 8 மாதங்களாக பல்வேறு நடவடிக்கைகளை இந்த பிரிவு எடுத்து வருகிறது. தற்போது கைதாகி உள்ள நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்கள், சூடான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பிற மாநிலத்தில் இருந்து போதைப்பொருள் கிடைக்கிறது. அதனை சென்னைக்கு கடத்தி வந்து சப்ளை செய்கின்றனர்.
நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் பார்ட்டிகளுக்கு சப்ளை செய்ய மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சொல்ல இயலாது. குறிப்பாக போதைப்பொருள் தேவை, சப்ளையை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த மாதம் வரை சுமார் 8 மாதத்தில் போதைப்பொருள் தொடர்பாக 996 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கஞ்சா தொடர்பாக 784 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக 2900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்கச்சாவடிகளில் சோதனை
போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்துள்ளோம். அது தொடர்பாக 319 பேரை கைது செய்துள்ளோம். போதைப்பொருள் வழக்கில் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 138 பேர் கைது செய்துள்ளோம். 8 மாதத்தில் சென்னையில் 21.9 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 8 மாதத்தில் 352 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்கை முழுமையாக கண்டறிந்து, அதனை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன்கள் யார், யார் என்பதனை கண்டறிந்து வருகிறோம். நைஜீரியா நாட்டில் இருந்து கூட போதைப்பொருள் நெட்வொர்க் செயல்ட்டு கொண்டு இருக்கிறது.
சென்னைக்கு பிற மாநிலத்தில் இருந்து தான் மெத்தபெட்டமைன் கடத்தி வரப்படுகிறது. பிற மாநில போலீசாருடன் சென்னை போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் கடத்தி வரப்படும் போது சுங்கச்சாவடிகளில் சோதனையின் போது கண்டறியவதில் சிக்கல் இருக்கிறது. ஒருங்கிணைந்து பணியாற்றுவதால் போதைப்பொருள் பறிமுதலுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. தற்போது கைதாகி உள்ளவர்களில் கும்பல் தலைவன் யாருமில்லை. மெத்தப்பெட்டமைன் ஒரு கிலோ ஒரு கோடி ரூபாய். கைதான நைஜிரியர்கள் கல்வி விசாவில் வந்துள்ளது தெரியவந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.