K U M U D A M   N E W S

போலீஸ்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெறிச்செயல்: ரவுடியுடன் சேர்ந்து மனைவியை கத்தியால் வெட்ட முயன்ற கணவன் கைது!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், கணவன் தினகரன், பிரபல ரவுடி 'காக்கா தீனா' மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து தனது மனைவி துர்காவைத் தாக்கிக் கத்தியால் வெட்ட முயன்ற வழக்கில், சிஎம்பிடி போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

பெண்ணின் காதை கடித்த 4 பாக்ஸர் நாய்கள்.. அலட்சியத்தில் உரிமையாளர்.. பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், வீட்டு வேலை செய்யும் பெண்ணை நான்கு 'பாக்ஸர்' வகை நாய்கள் கடித்ததில், அவரது காது கிழிந்ததுடன், பலத்த காயங்களும் ஏற்பட்டன. நாய்களை அதன் உரிமையாளர் கண்டுகொள்ளவில்லை என உஷா வேதனையுடன் புகார் அளித்த நிலையில், அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்; 50 சவரன் வரதட்சணை கேட்டு மிரட்டல்; திருமங்கலம் போலீசார் நடவடிக்கை!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணம் செய்ய உறுதியளித்த இளைஞர் ஆதித்யன், நிச்சயத்திற்குப் பிறகு 50 சவரன் தங்க நகைகள் வரதட்சணையாகக் கேட்டுத் திருமணம் செய்ய மறுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் ஆதித்யனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ரோகிணி திரையரங்கில் நடந்த சலசலப்பு.. யூடியூபருக்குக் கொலை மிரட்டல் விடுத்த தவெக தொண்டர் கைது!

ரோஹிணி திரையரங்கில், கரூர் விபத்து குறித்துப் பேசிய யூடியூப்பருக்குக் கொலை மிரட்டல் விடுத்த தவெக தொண்டரான கோகுல் என்பவரைச் சிஎம்பிடி போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் சோகம்: வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது மின்சாரம் தாக்கி ஆந்திரத் தொழிலாளி உயிரிழப்பு!

சென்னை முகப்பேரில், வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது, மின்சார இணைப்புப் பணியில் இருந்த ஆந்திர மாநிலத் தொழிலாளி நாராயணன் (40), மதுபோதையில் மின்சார ஜங்ஷன் பாக்சை தொட்டதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கள்ளக்காதல் விவகாரம்: ஓனரின் மனைவியுடன் பழகிய இளைஞர் கத்தியால் குத்திக் கொலை!

பெங்களூரு மிச்சர் கம்பெனி ஓனர் அல்போன்ஸின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த 19 வயது இளைஞர் பவன்குமார், திருப்பத்தூரில் உள்ள அவரது பாட்டி வீட்டில், ஓனர் அல்போன்ஸ் மற்றும் 3 நண்பர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மகன் மீது பொய் வழக்கு- டிஜிபி அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி; பரபரப்பு!

திருவல்லிக்கேணி போலீஸ் தனது மகன் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் குற்றம்சாட்டி, சென்னை டிஜிபி அலுவலகம் முன் ராணி, மணி மற்றும் மணிமாறன் ஆகிய மூவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் துயரம்: ஆதவ் அர்ஜூனா அலுவலகத்திற்குச் சென்று வீடியோ கேட்ட போலீஸ்!

கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு வந்த கரூர் போலீசார், பரப்புரையின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளைக் கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். சர்ச்சைக்குரிய புரட்சி பதிவுக்காகச் சைபர் கிரைம் போலீசும் வழக்குப்பதிவு செய்துள்ளதால், ஆதவ் அர்ஜுனாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

போடிநாயக்கனூரில் பெண் மரணத்தில் திடீர் திருப்பம் – மகளை கொன்று தந்தை நாடகமாடியது அம்பலம்

மகளை கொன்று நாடகமாடி தந்தையை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்

சென்ட்ரல் ரயில் நிலையம்: உறங்கும் பயணிகளிடம் செல்போன் திருட்டு வழக்கில் இருவர் கைது!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அயர்ந்து உறங்கும் பயணிகளின் செல்போன்களைத் திருடிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த லக்ஷ்மண குமார் மற்றும் மேடவாக்கத்தைச் சேர்ந்த வினோத் ஆகிய இருவரை ரயில்வே போலீசார் கைது செய்து, 10 செல்போன்களைப் பறிமுதல் செய்தனர்.

கோவையில் ரயிலை கவிழ்க்க சதி- 6 பேர் கைது

கோவையில் ரயில் தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்த ஆறு பேரை ரயில்வே காவல்துறை கைது செய்து நடவடிக்கை

சென்னையில் மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி உயிரிழப்பு

சென்னை வடபழனியில் மர்ம காய்ச்சல் காரணமாக 6 வயது சிறுமி உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை

கல்வி அதிகாரியை பெல்ட்டால் தாக்கிய தலைமை ஆசிரியர்- உத்தரபிரதேசத்தில் பரபரப்பு

பள்ளி தலைமை ஆசிரியர், கல்வி அதிகாரியை பெல்ட்டால் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி சாமியார் பாலியல் சீண்டல்: "என் அறைக்கு வா, உன்னை வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறேன்!"

சாமியார் சைதன்யானந்தா பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

குடியாத்தத்தில் மிளகாய் பொடி தூவி கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

குழந்தை கடத்தில் விவகாரத்தில் போலீசார் விரைந்து செயல்பட்டு 2 மணி நேரத்தில் பத்திரமாக மீட்டனர்

திமிரியில் மதிய உணவிற்கு பிறகு பள்ளி சிறுவன் மர்ம மரணம் – பெற்றோர் அதிர்ச்சி

ஒரே உணவை 2 குழந்தைகள் சாப்பிட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக பெற்றோர் புகார்

மலை கிராம மக்களிடையே மோதல் - போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு

கோயில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல் தொடர்பாக விசாரிக்க சென்ற போலீசாரில் வாகனத்தை ஊருக்குள் வரவிடாமல் தடுத்ததால் பரபரப்பு

சென்னையில் அரசு பஸ் மோதி இளம்பெண் உயிரிழப்பு – ஓட்டுநர் கைது

விபத்தை ஏற்படுத்தி மாநகர பேருந்து ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன

சென்னையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் கைது

தனது காதலி போல இருந்ததால் வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான நபர் வாக்குமூலம்

மேட்ரிமோனியால் மூலம் பழக்கம் – பெண்ணிடம் நகை திருடிய நபர் கைது

மேட்ரிமோனி மூலமாக பழக்கமான நபர் 2 சவரன் தங்கச் செயினை திருடி கொண்டு தப்பிச்சென்ற வழக்கில் போலீசார் கைது செய்து விசாரணை

கோவையில் தண்டவாளத்தில் குழந்தை உடல் கிடந்த சம்பவம் - 6 பேர் கைது

கோவையில் ரயில்வே தண்டவாளத்தில் குழந்தையின் உடல் கிடந்த சம்பவம் தொடர்பாக ஆறு பேரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்-சென்னையில் அவசரமாக தரையிறக்கம்

விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசரமாக கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர்

விஜய்யின் உயிருக்கு அச்சுறுத்தலா?-கூடுதல் பாதுகாப்பை கேட்கும் தவெக

சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுக்க தவெக முடிவு

சுவர் விளம்பரத்திற்கு போட்டி: கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலீசாருடன் வாக்குவாதம்

சுவர் விளம்பரம் எழுதுவது தொடர்பாக பிரச்னையால் சம்பவ இடத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலீசாரிடம் வாக்குவாதம்

சென்னை ஐகோர்ட் உட்பட 2 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீஸ் விசாரணை

சுங்க இல்லத்திற்கும் இமெயில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் ஊழியர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.