சென்னை நீலாங்கரை கேசுரின டிரைவ் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர் விஜய்யின் வீட்டின் மாடியில் பதுங்கி இருந்துள்ளார். இதனை கண்டு வேலை செய்பவர்கள் அந்த நபரை பிடித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விஜய் வீட்டில் நுழைந்த இளைஞர்
விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்ட மதுராந்தகத்தைச் சேர்ந்த அருண் என்பது தெரியவந்தது. விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், எப்படி அந்த நபர் வீட்டிற்கு நுழைந்தார் என்ற கேள்வி சந்தேகம் தவெகவின் மூத்த நிர்வாகிகளுக்கு எழுந்துள்ளது.
வெடிகுண்டு நிபுணர்கள் நேரில் வந்து வீடு முழுவதும் சோதனை நடத்தினர். இந்த நிலையில் வீடு சுற்றிலும் சென்னை போலீசாரின் பாதுகாப்பை கேட்க தவெக தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
கூடுதல் பாதுகாப்பு கேட்க முடிவு
ஏற்கனவே பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்குள்ளும் அடையாளம் தெரியாத நபர் நுழைந்த சம்பவத்திற்கு பிறகு தற்போது விஜய் வீட்டிற்குள்ளே நுழைந்து இருப்பது தவெக மூத்த நிர்வாகிகளுக்கு விஜயின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சந்தேகத்தை கிளப்பி உள்ளனர்.
மேலும் ஒட்டு கேட்பு கருவி வைக்கப்பட்டுள்ளதா? எனவும் சந்தேகம் எழுந்துள்ளதாக தவெக வட்டாரங்கள் சொல்கிறது. இதனால் ஒய் பிரிவு பாதுகாப்பு தனிப்பட்ட முறையில் இருந்தாலும், வீட்டை சுற்றி பாதுகாப்பு வழங்க சென்னை போலீசாரிடம் பாதுகாப்பு தவெகவினர் முடிவு செய்து உள்ளனர். மேலும் விஜய்யின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு வழங்க கோரியும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க தவெகவினர் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.