தமிழ்நாடு

மேட்ரிமோனியால் மூலம் பழக்கம் – பெண்ணிடம் நகை திருடிய நபர் கைது

மேட்ரிமோனி மூலமாக பழக்கமான நபர் 2 சவரன் தங்கச் செயினை திருடி கொண்டு தப்பிச்சென்ற வழக்கில் போலீசார் கைது செய்து விசாரணை

மேட்ரிமோனியால் மூலம் பழக்கம் – பெண்ணிடம் நகை திருடிய நபர் கைது
மேட்ரிமோனியால் மூலம் பழக்கமான பெண்ணிடம் நகை திருடிய நபர் கைது
சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த அக்கவுண்டன்ட் பெண் ஒருவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், மறுமணம் செய்து கொள்ள மேட்ரிமோனி வெப்சைட்டில் அப்ளை செய்துள்ளார். வெப்சைட்டை பார்த்து செல்போன் எண் மூலம் பழக்கமான நபர் ஒருவர், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பேசி வள்ளுவர்கோட்டம் எதிரே உள்ள பூங்காவிற்கு இருவரும் காரில் வந்துள்ளனர்.

செயினை திருடிச்சென்ற நபர் கைது

அப்போது பெண் கழுத்தில் இருந்த செயின் நன்றாக உள்ளது எனக்கூறியும், அதனை கழட்டித் தருமாறு கேட்டுள்ளார். அந்த பெண்ணும் அவரை நம்பி செயினை கழற்றிக் கொடுத்துள்ளார்.
அந்த நபர் வாங்கிய பின், சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணை கூல்டிங்ஸ் வாங்கி வருமாறு அனுப்பி உள்ளார். மீண்டும் வந்து அந்த பெண் செயினை கேட்டபோது, செயினை தான் தரவில்லை எனக் கூறி காரை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், செயினை திருடியதாக நுங்கம்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரை கைது செய்து விசாரணை. ஏற்கனவே சுரேஷ்குமார் மீது 4 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.