மும்பையில் இருந்து தாய்லாந்து நாட்டின் புக்கெட் நகருக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் (6E 1089) பயணிகள் விமானம் நேற்று மும்பை விமான நிலையத்தில் இருந்து 176 பயணிகள் 6 விமான ஊழியர்கள் 182 பேருடன் புறப்பட்டு, தாய்லாந்து நாட்டில் உள்ள புக்கெட் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
நேற்று இரவு அந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை வான்வழி அருகே நடுவனில் பறந்துக்கொண்டு இருந்தது. அதே நேரத்தில் மும்பை விமான நிலையத்திற்கு வந்த ஒரு மர்ம தொலைபேசி அழைப்பில், அந்த விமானத்தின் கழிவறைக்குள் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் மறைத்து வைத்திருப்பதாகவும், அந்த விமானம் நடுவாட்டில் வெடித்து சிதற இருப்பதாகவும் கூறிவிட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து பரபரப்படைந்த மும்பை விமான நிலைய அதிகாரிகள் அந்த விமானம் இப்போது எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்தபோது, சென்னை அருகே சென்றுக்கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து விமானத்தை அவசரமாக சென்னையில் தரையிறக்குவதற்கு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசினார்.
சென்னையில் அவசரமாக தரையிறக்கம்
இதையடுத்து இந்த விமானம் நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.அந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். அதோடு சென்னை விமான நிலைய வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடி படையினர் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்த விமானத்தை சூழ்ந்து கொண்டு, தீவிர சோதனை நடத்தினர். ஆனால் அந்த விமானத்தில் இருந்து வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே இது வழக்கமான புரளியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆனாலும் விமானம் முழுமையாக பரிசோதித்த பின்பு மீண்டும் சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டிற்கு புறப்பட்டுச் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.