சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடந்த 2012ம் ஆண்டு மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் மதுரைக்கு செல்ல இருந்த கணவன்-மனைவியை பிடித்து விசாரித்தனர்.அவர்கள் பைகளில் ரூ.33 கோடி மதிப்புடைய 3.3 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
கணவன் - மனைவிக்கு சிறை தண்டனை
இதையடுத்து தம்பதியைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.அப்போது இலங்கையைச் சேர்ந்த முகமது முனவர் என்பவர் போதைப்பொருளை தங்களிடம் கொடுத்து, மதுரையில் உள்ள மற்றொரு, இலங்கை நபரிடம் கொடுக்கப்படி கூறினார்.
இதையடுத்து மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள், கணவன்- மனைவி இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் கடந்த 2018ஆம் ஆண்டு, கணவனுக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
லுக் அவுட் நோட்டீஸ்
ஆனால் இந்தப் போதைப்பொருளை கணவன்-மனைவியிடம் கொடுத்து அனுப்பிய முக்கிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான இலங்கையை சேர்ந்த முகமது முனவர் கைது செய்யப்படாமல், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் முகமது முனவர் தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் அறிவித்தனர். இது தொடர்பாக அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கைது
இந்த நிலையில் நேற்று முன்தினம் இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது 13 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருக்கும் பிரபல போதை கடத்தல் கும்பலின் தலைவனான முகமது முனவர் இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்திருந்தார். அவருடைய பாஸ்போர்ட், ஆவணங்களைக் குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தபொழுது, இவர் 13 ஆண்டுகளாகத் தேடப்படும் பிரபல போதை கடத்தல் கும்பலின் தலைவன் முகமது முனவர் என்று தெரிந்தது. இதையடுத்து அவரை வெளியில் விடாமல் குடியுரிமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்தனர்.
அவரிடம், குடியுரிமை அதிகாரிகள், கியூ பிரான்ச் போலீசார், மத்திய உளவு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்பு சென்னையில் உள்ள மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். முகமது முனவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து அழைத்துச்சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
13 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த, பிரபல போதை கடத்தல் கும்பலின் தலைவன், இலங்கையிலிருந்து சென்னை வந்தபோது, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.