32 ஆண்டுகள் கழித்தும் கோலிவுட்டை கலக்கும் விஜயகாந்தின் படம்.. ரீ-ரிலீஸில் செம்ம வசூலாம்...!

32 ஆண்டுகள் கழித்து ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ”மாநகர காவல்” திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருவதாக குரு ராஜா இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜா தெரிவித்துள்ளார்.  

Sep 23, 2024 - 10:18
Sep 23, 2024 - 10:41
 0
32 ஆண்டுகள் கழித்தும் கோலிவுட்டை கலக்கும் விஜயகாந்தின் படம்.. ரீ-ரிலீஸில் செம்ம வசூலாம்...!

32 ஆண்டுகள் கழித்து ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ”மாநகர காவல்” திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருவதாக குரு ராஜா இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜா தெரிவித்துள்ளார்.  

திரைப்படக் கல்லூரி மாணவர்களில் பொற்காலமாக இருந்தது 80s,90s காலக்கட்டம். இந்த காலக்கட்டத்தில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பலரும் புதிய படைப்பாளியாக உருவாகினர் என்று சொன்னால் மிகையாகாது. 

அன்றைய காலகட்டத்தில் விஜயகாந்த் உதவி கமிஷனராக நடித்த " மாநகர காவல் " திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்து 1991 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ரிலீஸ் செய்தது. இதில் நம்பியார், சுமா ரங்கநாத்,  நாசர் , லட்சுமி, ஆனந்தராஜ் , ஆகியோர் நடித்திருந்தனர். சந்திரபோஸ் இசையமைத்திருந்தார். எம். தியாகராஜன் டைரக்ட் செய்திருந்தார். ஏவிஎம் நிறுவனம் தயாரித்த 150வது சினிமா தான் மாநகரக்காவல். ஆனால், முதல் படத்திலேயே விஜயகாந்த் போன்ற மிகப் பெரிய ஹீரோ மற்றும் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார் இயக்குநர் எம்.தியாகராஜன். மாநகர காவல் திரைப்படம் வெளியான அந்த காலக்கட்டத்தில் 25 வாரங்கள் திரையரங்குகளில் ஓடி வசூலில் சாதனை படைத்தது.

இப்படத்தை இயக்கிய பிறகு வெற்றி மேல் வெற்றி படங்களை கொடுத்தார் தியாகராஜன். இப்படி எல்லாம் சரியாக நடந்துக்கொண்டிருந்த போது தான் தியாகராஜன் ஒரு விபத்தில் சிக்கினார். அதன்பிறகு சற்று உடல் நலம்பெற்று எழுந்து வர சிலா வருடங்கள் ஆகிவிட்டது. காலப்போக்கில் சினிமாவில் காணாமல் போனார் தியாகராஜன். இதனால் அவர் வறுமையில் வாடியதாகவும், ஏவிஎம் வாசலிலேயே  இறந்துக்கிடந்தார் எனவும் செய்திகள் வந்தது. இப்படி ஒரு இயக்குநர் எடுத்த “மாநகர காவல்” திரைப்படம் தான் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை குவித்து வருகிறது.

32 வருடங்கள் கடந்த பின் குரு ராஜா இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் திரையிட ஏவிஎம் நிறுவனத்திடமிருந்து உரிமை பெற்று கடந்த வாரம் ரிலீஸ் செய்தது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை  உள்ள குறிப்பிட்ட திரையரங்குகளில் டிக்கட் கட்டணத்தை குறைத்து திரையிட்டனர். டிக்கட் கட்டணம் குறைந்து இருந்ததால் மக்களிடம் படம் பார்க்கும் ஆர்வம் அதிகரித்து திரையிட்ட தியேட்டர்களில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக வசூலானதாக தகவல்கள் வெளியானது.

மேலும் படிக்க: சர்வாதிகாரி மோடியும் காமராஜரும் ஒன்றா? தமிழிசைக்கு செல்வப்பெருந்தகை கேள்வி

”200 ரூபாய் டிக்கட் கட்டணம் இருந்தால் மக்கள் சுமையாக கருதுவதாக நினைத்தோம். அதனால்தான் 50 ரூபாய் மற்றும் 80 ரூபாய் கட்டணம் உள்ள தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்தோம். படம் நல்ல வசூலை தந்து கொண்டு இருக்கிறது. அதனால் தொடர்ந்து நிறைய தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம் " என்று குரு ராஜா இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜா கூறுகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow