ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா.. குதிரை ஆட்டத்துடன் தேரோட்டம்!

அரிமளம் அருகே உள்ள ஓனாங்குடியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு குதிரை ஆட்டத்துடன் வெகு விமர்சையாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

Mar 31, 2025 - 21:05
 0
ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா.. குதிரை ஆட்டத்துடன் தேரோட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஓணாங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 16ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது.

இதனைத்தொடர்ந்து 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் முதல் நாள் திருவிழா நடைபெற்றது. இதனிடையே அடுத்தடுத்து நாட்களில் பல்வேறு சமுதாயத்தாரின் மண்டகப்படி திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்கார நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதனிடையே நேற்று முன்தினம் நடைபெற்ற பொங்கல், பால்குட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிலையில் இன்று 9 ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டம் நடைபெறுவதற்கு முன்பு இசை கலைஞர்களின் வாத்தியங்களுக்கு ஏற்ப குதிரை ஆட்டம் நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து மா பலா வாழை உள்ளிட்ட முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருக்க சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் ஏராளமான பக்தர்கள் பேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். 

தேர் சென்ற வழிநெடிகளும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து நாளை காப்பு களையப்பட்டு விழா முடிவடைகிறது. தேர் திருவிழா நடைபெறுவதை ஒட்டி அரிமளம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow