சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு... நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (அக். 16) மாலை திறக்கப்பட்ட நடை வருகிற 21ம் தேதி அன்று சாத்தப்படவுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கேரளாவின் சபரிமலையில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில். இந்த ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருவர். இங்கு ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை, பங்குனி உத்திர திருவிழா, ஓணம் போன்ற நாட்களில் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இவை தவிர தமிழ் மாதத்தின் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று (அக். 16) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் ராஜீவரரு தலைமையில், மேல்சாந்தி பி.என்.மகேஷ் கோயில் நடையை திறந்து வைத்து தீபாராதனை காண்பித்தார். நாளை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட இருக்கின்றனர். வருகிற 21-ம் தேதி நடை சாத்தப்பட இருக்கிறது.
இதையடுத்து நாளை (அக். 17) அதிகாலை 5 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி பிரம்மதத்தன் ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்தி நெய் அபிஷேகத்தை தொடங்கி வைத்தார் தொடர்ந்து கண்பதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் தொடங்கும் காலை 7:30 க்கு உஷபூஜைக்கு பின்னர், கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் வரு ஆண்டு காலத்திற்கான மேல் சாந்தி குலுக்கல் தேர்வு நடைபெறும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு நேர்முகத் தேர்வு நடத்தி தேர்வானவர்கள் பட்டியலில் இருந்து வருவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்.
இவர் ஒரு ஆண்டு காலம் சபரிமலையில் தங்கி ஐயப்பனுக்கு பூஜைகளை செய்வார் இதுபோல மாளிகைபுறத்தம்மன் கோயிலிலும் மேல் சாந்தி குலுக்கல் தேர்வு நடைபெறும் வரும் 21 வரை சபரிமலை நடை திறந்திருக்கும் எல்லா நாட்களிலும் காலையில் கணபதி ஹோமம் உஷ பூஜை, மதியம் களபாபிஷேகம், கலசாபிஷேகம் உச்ச பூஜை மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம், இரவு அத்தாழபூஜை ஆகியவை நடைபெறும் எல்லா நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு பிரசித்தி பெற்ற படி பூஜையும் உண்டு. 21 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும் மண்டல மகர விளக்கு காலம் நெருங்கி வரும் நிலையில் சபரிமலையில் பக்தர்களுக்கான வசதிகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலக்கலில் கூடுதலாக 2000 வாகனங்கள் பார்க்கிங் செய்ய வசதியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரப்பர் மரங்கள் வெட்டப்படுவதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?